தீவர் சினிமா விமர்சனம்

நடிகர் : அர்ஜூன் கபூர், மனோஜ் பாஜ்பாய்
நடிகை : சோனாக்ஷி சின்ஹா
இயக்குனர் : அமித் ரவீந்தர்நாத் சர்மா

தயாரிப்பாளர் : போனி கபூர், சஞ்சய் கபூர், சுனில் லுல்லா, நரேஷ் அகர்வால், சுனில் மன்சந்தா.

தெலுங்கு சூப்பர்ஹிட் படமான ஒக்கடுவின் ரீமேக் படமே தீவர். தீவர் படம் நல்லா இருக்கா? ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளதா? என இனி பார்ப்போம்...

தெலுங்கு சூப்பர்ஹிட் படமான ஒக்கடுவின் ரீமேக் படமே தீவர். படத்தில், கபடி வீரர் பின்டூ கேரக்டரில், அர்ஜூன் கபூர் நடித்துள்ளார். ராதிகா கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹாவும், கஜேந்தர் சிங் கேரக்டரில் மனோஜ் பாஜ்பாயும், பின்டூவின் தந்தை சத்யபால் கேரக்டரில் ராஜ் பாப்பரும் நடித்துள்ளனர். கஜேந்தர் சிங்கின் பிடியில் இருந்து தப்பித்து பின்டூவிடம் சரணடைகிறார் ராதிகா. கபடி வீரரான பின்டூவின் விளையாட்டு எதிர்காலத்தை தீர்மானிக்கும் போட்டி, அவரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதே படத்தின் கிளைமாக்ஸ். ராதிகாவை திருமணம் செய்ய ஆசைப்படும் கஜேந்தர் சிங், ராதிகாவை, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ராதிகாவின் குடும்பத்தை கொடுமைப்படுத்துகிறார். ஒருநிலையில், ராதிகாவின் அண்ணனையும் கொல்கிறார். இதனால், கஜேந்தர் சிங்கிடம் இருந்து தப்பிக்கும் ராதிகா, எதிர்பாராதநிலையில் பின்டூவை சந்திக்கிறார். அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து ராதிகாவை, பின்டூ காப்பாற்றுகிறார். இருவருக்கிடையேயும் காதல் அரும்புகிறது. கஜேந்தர் சிங்கின் நண்பரும், உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், ராதிகாவை தேடும் பணியில் சத்யபால் ஈடுபட்டிருக்க, அவளோ, தன் மகன் பின்டூவின் அரவணைப்பில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறார். இறுதியில், பின்டூ, ராதிகாவை கரம்பிடித்தாரா? அவரின் கபடி எதிர்காலம் என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்ல நினைத்திருக்கும் படம் தான் தீவர்.

இந்த படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமாகியுள்ள அமித் ரவீந்தர்நாத் சர்மா, தான் பணியாற்றிய விளம்பர துறை அனுபவங்களை இதில் புகுத்தி வெற்றி பெற முயற்சித்துள்ளார். ஆனால், அதற்கு தேர்ந்தெடுத்துள்ள இந்த ரீமேக் படம், அவருக்கு கைகொடுக்கவில்லை என்றே கூறவேண்டும். இசையமைப்பாளர் சஜித் -வஜித் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு பெரும் சலிப்பை அளிக்கின்றன. எடிட்டிங் ஒரு சீரற்ற நிலையில் உள்ளது. படத்தொகுப்பில் குறை சொல்ல முடியாது. படத்தின் பின்னணி இசை, ரசிகர்களுக்கு அலுப்பை தவிர வேறு எதையும் தரவில்லை. கதையில் பல கிளிஷேக்கள் உள்ள படியால், திரைக்கதை நன்றாக அமைக்கப்பட்டிருந்தும் அது, ரசிகர்களிடம் எடுபடவில்லை. வசனங்கள் சிறப்பாக உள்ளது. கலை மற்றும் காஸ்டியூம் துறையினர் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தின் பெரும்பாலான இடங்களில் அபார நடிப்பை வெளிப்படுத்தியுள்ள அர்ஜூன் கபூர், முக்கியமான சீன்களில் கோட்டை விட்டுள்ளார். சோனாக்ஷி சின்ஹா மீது பல குறைகளை, அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தாலும், தனது குறைகளை, அவர் திருத்திக்கொள்வதாக தெரியவில்லை. ராஜ் பாப்பருக்கு இந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை போலும். நடிப்பில் மனோஜ் பாஜ்பாய் வெளுத்து வாங்கியுள்ளார். படத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும், ஆடியன்ஸ் தரப்பில் கிளாப்ஸ் பறக்கிறது.

தீவர் - கெட்ட படம் என்று கூறமுடியாது...எதையும் புதிதாக காட்டவில்லை.. பொழுதுபோகாமல் இருந்தால் படம் பார்க்கலாம்......

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget