கெளஹர் கான் அறை வாங்கிய ரகசியம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த கெளஹர் கான், தனது பப்ளிசிட்டியை உயர்த்தி்க் கொள்வதற்காக, ஜூனியர் ஆர்ட்டிஸ்டை,
அறையச் சொன்ன சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.

மும்பையில் நடந்த டிவி நிகழ்ச்சி ஒன்றில், கெளஹர் கான் கலந்துகொண்டிருந்தார். அப்போது பார்வையாளர்களாக அமர்ந்திருந்த அகில் மாலிக், திடீரென்று, கெளஹர் கானின் அருகே சென்று, அவரது கன்னத்தில் அறைந்தார். கெளஹர் கான், அரைகுறை ஆடையில் இருந்ததால், அவர் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் கூறினார். அவரை, போலீசார் உடனே கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், டிவி ஒன்றிற்கு பேட்டியளித்த அகில் மாலிக் கூறியதாவது, கெளஹர் கான் தான், நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போது, தன் மீது தாக்குதல் நடத்த சொன்னதாகவும், இதனால், தனது பப்ளிசிட்டி அதிகரிக்கும். இதற்கு பிரதிபலனாக, விரைவில் துவங்க உள்ள புதுப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கெளஹர் கான் சொன்னதாக, அகில் மாலிக் கூறினார். 

தான் பப்ளிசிட்டி தேடிக்கொள்வதற்காக, அகில் மாலிக்கை வைத்து தாக்குதல் நடத்த சொன்னதாக வந்துள்ள செய்திக்கு நடிகை கெளஹர் கான் கணடனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கெளஹர் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திரைத்துறையில் முன்னணி இடத்தில் வருவதற்காக, நான் கடினமாக உழைத்து வருகிறேன், படிப்படியாக முன்னேற்றம் கண்டும் வருகிறேன். நான் பப்ளிசிட்டிக்காக, பொது நிகழ்ச்சி ஒன்றில் என் மீது தாக்குதல் நடத்த கூறியதாக ஒருவர் சொன்னதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். பொது நிகழ்ச்சியில், என்மீது தாக்குதல் நடத்தி பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் அளவிற்கு, தான் ஒன்றும் தரம்தாழ்ந்தவள் அல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த தான், தற்போது சில முன்னணி படங்களில் நடிக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளேன். கடின உழைப்பின் பலனாகவே, எனக்கு இந்தளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர, எனக்கு சீப் பப்ளிசிட்டி தேவையில்லை. ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடுவதற்கு முன்பு, ஒரு நிமிடம், எனது எதிர்காலத்தை அவர்கள் நினைத்து பார்த்திருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கெளஹர் கான் குறிப்பிட்டுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget