புதிய பரிணாமத்தில் தயாரிக்கபட்ட 'IO ஹாக்' ஸ்கேட்டிங்

IO ஹாக் என்பது கைப்பிடி மற்றும் ஸ்கேட்போர்டு இல்லாமல் சாலையில் செல்லக்கூடிய சாதனம் ஆகும். இதன் விலை $1,799 (£1,185) ஆகும், மற்றும்
இதன் அதிகபட்ச வேகம் வரம்பு 6.2mph (10km / h). எனினும் இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த எதிர்கால போர்டு 22lbs (10kg) எடை கொண்டது மற்றும் ஒவ்வொரு பாதத்திலும் உள்ளமைக்கப்பட்ட முக்கிய சென்சார்கள் கொண்டிருப்பதால், நாம் நாய்ந்திருந்தாலும் நமது உடலை சாய்க்காமல் கட்டுப்பாட்டில் பார்த்துக்கொள்கிறது. 

சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் இருக்கிறது, ஆனால் இந்த ஒவ்வொரு மாடலின் மற்ற குறிப்புகள் மற்றும் விலை ஒரே மாதிரியாக உள்ளன. ஒவ்வொரு IO ஹாக் 220lbs (110 கிலோ) எடை வரை தாங்கக்கூடியதாக இருக்கும், மற்றும் இவை தரையில் இருந்து சுமார் ஆறு இன்ச் (15cm) உயரத்தில் இருக்கிறது. இதன் டயர்கள் 6.7 இன்ச் (17cm) அளவிடுகிறது மற்றும் முழு சாதனமும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு கொண்டுள்ளது. ஒவ்வொரு IO ஹாக் சாதனத்தையும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 முதல் 12 மைல் (14km மற்றும் 19km) வரை பயணிக்க முடியும், ஆனால் அது நிலப்பரப்பை பொறுத்தது. 

IO ஹாக் சாதனத்தில் சவாரி செய்வதற்கு கற்றுக்கொள்ள வெறும் ஐந்து நிமிடங்கள் போதும் என்று சாதனத்தை உருவாக்கிய கலிபோர்னியாவை சார்ந்த ஜான் சொபடியன், கூறியுள்ளார். நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்குட்டபட்டவாறு உள்ளன, நாம் எப்போதும் அதிக உற்பத்தி திறன் மற்றும் திறமையான வழிகளை தேடுகிறோம் என்றும் திரு.சொபடியன், கூறியுள்ளார். IO ஹாக் சாதனத்தை 'நாங்கள் முன்னோக்கி நகர்த்தும் அடுத்த பரிணாம வளர்ச்சி' ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.  
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget