வியூசோனிக் V55 ஸ்மார்ட்போன்

ஐரிஸ் ஸ்கேனிங் மற்றும் ரெகக்னைஷேசன் (recognition) தொழில்நுட்பம் கொண்ட முதல் ஸ்மாரட்போனை புத்தாண்டு அன்று
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரிய டிஸ்ப்ளே தொடர்புடைய நிறுவனமான, வியூசோனிக் நிறுவனம் ஐரிஸ் ரெகக்னைஷேசன் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை ஜனவரி மாதத்தில் வெளியிடவுள்ளது. 

வியூசோனிக் V55 ஸ்மார்ட்போன் கைபேசியின் மேல் வலது மூலையில் ஐரிஸ் ஸ்கேனர் அடங்கும் மற்றும் ஒரு சிறிய துண்டினால் அது மூடப்பட்டிருக்கும். யூசர்கள் இந்த ஸ்கேனரை பயன்படுத்த சிறிய துண்டினை (ஸ்லைடு) நகர்த்த வேண்டும். ஸ்லைடை திறந்தவுடனே லைட் எரியும், அது ஐரிஸ் ஸ்கேனிங் செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது என்று அறிக்கை கூறுகிறது. 

மேலும் யூசர்கள் V55 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட தனிப்பட்ட கோப்புகள் (files) மற்றும் ஆவணங்களை (documents) பாதுகாக்க முடியும் என்றும் கூறுகிறது. ஐரிஸ் ரெகக்னைஷேசன் சென்சார் மூலம் பாதுகாக்கப்படும் தகவல்களை அணுக, உங்களுடைய கண்ணை சென்சார் ஸ்கேன் செய்து, பூட்டிய தகவல்களை திறக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

வியூசோனிக் V55 ஸ்மார்ட்போனில் 1.4GHz 64-பிட் ஸ்னாப்ட்ராகன் 410 குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் Adreno 306 ஜிபீயூ மற்றும் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 16ஜிபி மற்றும் 32ஜிபி ஆகிய இரண்டு உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு வகைகளில் வருகிறது. V55 ஸ்மார்ட்போனில் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு HD OGS டிஸ்ப்ளே இடம்பெறுகிறது மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் பின்புற சோனி கேமரா உள்ளது. இதில் 4G LTE நெட்வொர்க்குகள் ஆதரிக்கிறது. துரதிருஷ்டவசமாக, இந்த ஸ்மார்ட்போனில் ஓஎஸ் பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. 

வியூசோனிக் V55 ஸ்மார்ட்போன்:

  • 1.4GHz 64-பிட் ஸ்னாப்ட்ராகன் 410 குவாட் கோர் ப்ராசசர்,
  • 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு HD OGS டிஸ்ப்ளே,
  • Adreno 306 ஜிபீயூ,
  • 2ஜிபி ரேம்,
  • 16ஜிபி மற்றும் 32ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு,
  • 13 மெகாபிக்சல் பின்புற சோனி கேமரா,
  • 4G LTE நெட்வொர்க்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget