Wiio Wi ஸ்டார் 3ஜி ஸ்மார்ட்போன்

Wiio நிறுவனம் அதன் புதிய 3ஜி ஸ்மார்ட்போனான Wi ஸ்டார் 3ஜி ஸ்மார்ட்போனை ரூ.3,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய
ஸ்மார்ட்போன் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஈபே இந்தியா வழியாக பிரத்தியேகமாக கிடைக்கிறது. இந்த Wiio Wi ஸ்டார் 3ஜி ஸ்மார்ட்போன் மிகவும் மலிவான 3G ஆதரவு கொண்ட 5 இன்ச் ஸ்மார்ட்போன் ஆகும் என்று நிறுவனம் கூறியுள்ளது. 

டூயல் சிம் ஆதரவு கொண்ட Wi ஸ்டார் 3ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இது ஒரு வழக்கமான சிம் மற்றும் ஒரு மைக்ரோ சிம் ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த Wi ஸ்டார் 3ஜி ஸ்மார்ட்போனில் ரேம் 512MB உடன் இணைந்து 1.3GHz டூயல் கோர் மீடியாடெக் (MTK6572) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. 
இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. Wi ஸ்டார் 3ஜி ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. Wi ஸ்டார் 3ஜி ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi, மைக்ரோ -யுஎஸ்பி, மற்றும் ப்ளூடூத் ஆகியவை அடங்கும். 

இதில் 2000mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. இது 145.5x77.5x9.8mm அளவிடகிறது, 164 கிராம் எடையுடையது மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும் என்று வளைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், ஆம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கய்ரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

Wiio Wi ஸ்டார் 3ஜி ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 

  • டூயல் சிம்,
  • 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
  • ரேம் 512MB,
  • 1.3GHz டூயல் கோர் மீடியாடெக் (MTK6572) ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 3ஜி,
  • ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
  • Wi-Fi,
  • மைக்ரோ யுஎஸ்பி,
  • ப்ளூடூத்,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 2000mAh பேட்டரி,
  • 164 கிராம் எடை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget