மோட்டோ இ ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைந்தது

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ சாதனங்களை ஆன்லைன் கூட்டாளாரான Flipkart உடன் இணைந்து இந்திய சந்தையில் சலுகைகளுடன் வழங்க அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகைகள், பிப்ரவரி
மாதம் 15ம் தேதியில் இருந்து 9ம் தேதி வரை Flipkart வழியாக மோட்டோ இ, மோட்டோ ஜி (ஜென் 2), மோட்டோ எக்ஸ் (ஜென் 2), கூகுள் நெக்ஸஸ் 6 மற்றும் மோட்டோ 360 ஆகிய சாதங்களுக்கு வாங்குகிறது. 

இனிய தொடக்கமாக, நிறுவனம் தற்காலிகமாக இந்தியாவில் பிரபலமான பட்ஜெட் ஸ்மார்ட்போனான மோட்டோ இ ஸ்மார்ட்போன் விலை குறைத்துள்ளது, அதன் உண்மை விலையான ரூ.6,999ல் இருந்து ரூ.1,000 தள்ளுபடி செய்து ரூ.5,999 விலைக்கு தற்போது கிடைக்கும். மேலும் நிறுவனம், வாடிக்கையாளர்கள் பழைய போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் மோட்டோ ஜி (ஜென் 2) மற்றும் மோட்டோ எக்ஸ் (ஜென் 2) வாங்கும்போது ரூ.4,000ல் இருந்து ரூ.6,000 வரை தள்ளுபடிகள் பெறலாம். இதே மாதிரியான எக்ஸ்சேஜ் சலுகைகளை கடந்த மாதமும் இரண்டாவது தலைமுறையான மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்கியது. 

ஒவ்வொரு மோட்டோ ஜி (ஜென் 2) ஸ்மார்ட்போனை வாங்கும்போது, ரூ.8,990 மதிப்புடைய மோட்டோ டெக் ப்ளூடூத் ஸ்பீக்கரை மோட்டோரோலா இந்தியா வழங்குகிறது. கூகுள் நெக்ஸஸ் 10 ஸ்மார்ட்போனும் ரூ.10,000 வரை எக்ஸ்சேஜ் சலுகைகளுடன் தற்போது கிடைக்கிறது. மேலும், கூகுள் நெக்ஸஸ் 6 உடன் இணைந்து மோட்டோ 360 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் மொத்த விலையில் ரூ.10,000 வரை கூடுதல் சலுகைகளை வழங்குகிறது.

மற்ற தகவல்களான, மோட்டோ இ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தப்பட்டு இந்தியாவில் சோதனை தொடங்கியுள்ளது. 

மோட்டோ இ ஸ்மார்ட்போன்: டூயல் சிம் கொண்ட மோட்டோ இ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.3 இன்ச் டிஸ்ப்ளே, இடம்பெறுகிறது. இதில் 256ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.2GHz டூயல் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 200 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. 

மோட்டோ இ ஸ்மார்ட்போனில் 5 மெகாபிக்சல் கொண்ட பின்புற கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi 802.11 b/ g/ n, ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, Wi-Fi டைரக்ட், FM ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் 3ஜி ஆகியவை வழங்குகிறது. இது கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது. மேலும் இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், மற்றும் அம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது. இதில் 1980mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 142 கிராம் எடையுடையது. 

மோட்டோ இ ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • டூயல் சிம்,
  • 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.3 இன்ச் டிஸ்ப்ளே,
  • 1ஜிபி ரேம்,
  • 1.2GHz டூயல் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 200 ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 5 மெகாபிக்சல் கொண்ட பின்புற,
  • Wi-Fi 802.11 b/ g/ n,
  • ஜிபிஎஸ்,
  • ப்ளூடூத் 4.0,
  • Wi-Fi டைரக்ட்,
  • FM ரேடியோ,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • 3ஜி,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 1980mAh பேட்டரி,
  • 142 கிராம் எடை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget