புதிய தோற்றத்தில் ஹோண்டா அசிமோ

ஒளி உமிழும் கோட் : இரவு நேரத்தில் சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு என்றே வடிவமைக்கபட்டிருக்கிறது. இதிலுள்ள எல்இடி விளக்குகளை ஆன்
செய்தால் சட்டையிலிருந்தே ஒளி உமிழும்.

இதிலுள்ள பேட்டரி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். நீர் புகாது என்பதால் மழையிலும் இதை அணிந்து கொள்ள முடியும்.

புது அவதாரத்தில் ஹோண்டா அசிமோ : ஹோண்டா நிறுவனம் மனிதனைப் போல செயல்படும் ரோபோவை (எந்திர மனிதன்) உருவாக்கத்தில் கடந்த 20 வருடங்களாக ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியில் ஹோண்டா அசிமோவின் மேம்பட்ட வடிவத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த முறை அசிமோ மனிதர்களோடு கை குலுக்குகிறது, கால்பந்து விளையாடுகிறது, படி ஏறி இறங்கி தம்ஸ் அப் காட்டுகிறது. 4.2 அடி உயரமுள்ள இந்த அசிமோ ரோபோ முன்னை விட வேகமாக தானியங்கி முறையில் இந்த செயல்களை செய்து அசத்துகிறது.

பல நபர்கள் ஒரே நேரத்தில் பேசினாலும், ஒவ்வொருவருக்கும் பதில் சொல்கிறது இந்த ரோபோ.

நியூரோபோனிக் சிப் : கணினி இயங்குவதற்கு பல தொழில்நுட்பங்கள் இணைகிறது என்றாலும் அதன் சிப் தான் முக்கிய பாகம். இது கிட்டத்தட்ட கம்ப்யூட்டரின் மூளை. இங்கிருந்துதான் கட்டளைகள் செல்லும்.

இதனை மேம்படுத்தி கிட்டத்தட்ட மனித மூளையில் செயல்படும் அளவுக்கு கொண்டுவர தொழில்நுட்ப உலகம் முயற்சித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது நியூரோபோனிக் சிப் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் உள்ளனர் விஞ்ஞானிகள். தற்போதைய கணினியில் சிலிக்கான் சிப் தான் பயன்படுத்தப்படுகிறது. இதை கணினி போன்ற தொழில்நுட்பங்களில் மட்டுந்தான் பயன்படுத்த முடியும்.

ஆனால் நியூரோபோனிக் சிப் மனித மூளைக்கு ஒப்பானதாக வடிவமைக்கப்படுவதால் இதை ரோபோட் உருவாக்கத்திலும் பயன்படுத்தலாம். ஒலி, ஒளி, வண்ணம் போன்றவற்று எதிர்வினைகள் செய்யும். அதாவது ஒரு புகைப்படத்தை பார்த்தால் அதற்கு தானாகவே ஒரு எதிர்வினை கொடுக்கும். எதிர்காலத்தில் தொழில்நுட்பமும் மனித செயல்பாடுகளைப் போல மாற்றம் அடைவதற்கான முயற்சி இது என்கிறது விஞ்ஞான உலகம். குவல்காம் நிறுவனம் இதை உருவாக்கி வருகிறது.

சைக்கிள் முகப்பு விளக்குகள் : மேலை நாடுகளில் சைக்கிள்களுக்கு புதிய புதிய வசதிகளை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் இப்போது சைக்கிள்களுக்கான முகப்பு விளக்கு மற்றும் பின்னால் வருபவர்களுக்கு தெரியக்கூடிய வகையிலான எச்சரிக்கை விளக்குகளையும் வடிவமைத்துள்ளனர்.

முன்னர் சைக்கிளின் முகப்பு விளக்கு தேவைக்கு டைனமோ பயன்படுத்தப்பட்டது. ஆனால் அது வழக்கொழிந்து விட்டது. அதன் டிஜிட்டல் அவதாரமாக இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதன் சிறப்பு இந்த சைக்கிளின் பின்னால் வரும் வாகனங்களுக்கும் தெரிவது போல உள்ள எச்சரிக்கை விளக்குகள்தான்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget