நீங்கள் திருமணமான புதியதில் கருத்தரிக்காமல் இருக்க எடுத்துக் கொள்ளும் கருத்தடை மருந்துகள் கூட உங்களது குழந்தை பாக்கியத்தை தள்ளி
வைக்கும்.
உடலுறவு கொள்ளுதல் மட்டுமே உங்களுக்கு கருத்தரிக்க உதவாது, அதற்கேற்ப உடல்நிலையும், மனநிலையும் இருவருக்கும் சரியான நிலையில் இருந்தாலே கருத்தரிக்க முடியும். கருத்தரிக்க விரும்பும் தம்பதியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
கருத்தரிக்க விரும்பும் தம்பதியினர், குழந்தைப் பேறு பெற விரும்பும் முன்னர் தகுந்த மருத்துவரை அணுகி உடல்திறன் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. தற்போதைய சூழ்நிலையில் நமது தற்போதைய உணவுப்பழக்கம் கருத்தரிக்க தடையாய் இருக்கிறது. எனவே, தயக்கம் இன்றி மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் கருத்தரிக்க விரும்பும் ஒருசில மாதங்களுக்கு முன்பே கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்திவிடுங்கள். இதன் ஆற்றல் ஒரு சில வாரங்களுக்கு கூட தொடரலாம் என மருத்துவர்கள் சொல்கின்றனர். கருத்தடை மாத்திரைகள் உங்களது மாதவிடாய் சுழற்சியில் கொஞ்சம் மாற்றம் ஏற்படுத்தலாம்.
எனவே, நீங்கள் கருத்தரிக்க விரும்புவதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்னரே இந்த மாத்திரைகளை நிறுத்துவதன் மூலம், உங்களது மாதவிடாய் சுழற்சி சரியான நிலையடையும். இதனால், நீங்கள் சரியான நாளினை கண்டறிந்து உடலுறுவு கொள்ளும் போது, எளிதாக கருத்தரிக்க வாய்ப்புகள் உள்ளது.
கருத்தரிக்க விரும்பும் பெண்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னர் இருந்தே வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது நல்லது. இது உங்களது உடல்திறனை அதிகரிக்க உதவும். எனவே, எளிதில் நீங்கள் கருத்தரிக்க இயலும்.
கருத்தரிக்க விரும்பும் தம்பதியர், மது மற்றும் புகையை விட்டு விலகி இருப்பது நல்லது. இதுதான் பெரும்பாலான வகைகளில் கருத்தரிப்பை தள்ளி வைக்கிறது. அதுமட்டுமல்லாது, ஆண்களுக்கு ஆண்மை குறைவையும் ஏற்படுத்துகிறது.
கருத்தரிக்க விரும்பும் பெண்கள் தங்களது உடல் எடையை சரியான அளவில் வைத்துருப்பது அவசியம். கருவில் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, குழந்தையை தாங்குவதற்கான உடல் எடை பெண்களுக்கு இருக்க வேண்டும்.
கருத்தரிக்க விரும்பும் பெண்கள் காபியை குறைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் காபியில் இருக்கும் காப்ஃபைன் என்னும் மூலப்பொருள் அதிகப்படியாக உடலில் கலந்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
கருத்தரிக்க விரும்பும் பெண்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது. உங்களது உடல்திறன் குழந்தைப் பேறு அடைய மிகவும் அவசியாமான ஒன்று.

கருத்துரையிடுக