கூந்தல் வளர்ச்சி பெற வேண்டுமா

இளமையில் எல்லோரிடமும் இயற்கையான அழகு குடி கொண்டிருக்கும். பார்த்ததும் பளீரிடும் வெளிப்புற அழகுதான் பிரதானமாகத் தெரியும்.
வருடங்கள் செல்லச் செல்ல மோசமான சுற்றுப்புறச் சூழலும், நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுவகைகளும் நமது புறத்தோற்றத்தைப் பாழாக்கிவிடும். பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி வெளித்தோற்றத்தில் மட்டும் பந்தாவாக அழகுபடுத்திக் கொள்வதால் எந்தப்பிரயோஜனமும் இல்லை. 

உடலுக்குள் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நாளடைவில் வெளிப்புற அழகும் பாழ்பட்டுவிடம். எனவே உடல் ஆரோக்கியம் மிக மிக முக்கியம். ஆரோக்கியமான ஆகாரம் எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் தோற்றத்தில் மாறுபாடுகள் ஏற்படும். கன்னங்களில் பருக்கள் தோன்றும், பற்களின் நிறம் மாறும். இவை காரணமாகவே பெண்களுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடும். 

கண்கள், பற்கள் போன்றவற்றைச் சரிவர பராமரிக்காவிட்டால், மனஉளைச்சலில் மழுங்கித் தவிக்க வேண்டியிருக்கும். இயற்கை அன்னை அள்ளித் தரும் அருமருந்தான காய், கனி, பூக்களைத் தனியாகவோ அல்லது நாம் உண்ணும் உணவுடன் எடுத்துக் கொண்டால் தான் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். 

ஒருவரின் வெளிப்புற அழகு மட்டுமே அவரை உயர்த்திவிடுவதில்லை. இந்த இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதால் மட்டுமே முதுமையை விரட்டி இளமையைத் தக்க வைக்க முடியும். முக்கனிகளில் மட்டுமல்ல. நம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் முதலிடம் மாம்பழத்துக்குத் தான். வெயிலை முந்திக் கொண்டு சந்தைக்கு வரும் மாம்பழத்தைச் சாப்பிட்டால், சூடு பிடிக்கும் என்று சிலர் சொல்வார்கள். 

உண்மையில் அந்தந்த சீஸனில் வரும் பழங்களைச் சாப்பிடும் போது தான் அவற்றின் பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். மொழு மொழு மாம்பழம் தரும் கொழு கொழு அழகு குறிப்புக்களைப் பார்க்கலாம். 

மாங்கொட்டையில் இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சியில் முக்கியப் பங்கு இருக்கிறது. இந்தப் பருப்பை வெண்ணெய் போல நைசாக அரைத் தெடுப்பதால், இதை மோங்கோ பட்டர் என்று சொல்வார்கள். இது, தலைமுடிக்கு கண்டிஷனராகச் செயல்படுகிறது. சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். 

இதற்கு ஒரு டேபிள்ஸ்பூன் மேங்கோ பட்டர் (அ) முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்து விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலைமாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால், முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளரத் தொடங்கும். 

மேங்கோ பட்டர், 
நல்லெண்ணெய், 
தேங்காய் எண்ணெய், 
விளக்கெண்ணெய்... 

இந்த நான்கையும் சம அளவில் கலந்து மிக்ஸியில் அடித்து வெயிலில் வைத்து எடுக்கவும். இதை தலையில் பத்து போல் போட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு சம அளவில் வெந்தயம், பயத்தம் பருப்பை கலந்து ஊறவைத்து அரைத்த விழுதைத் தேய்த்து தலைக்கு குளித்தால், பொடுகுத் தொல்லை போயே போச்சு.. பொடுகால் முடி உதிர்வது நின்று. கூந்தலும் பளபளக்கும்!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget