மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பயர் 4 ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் ஃபயர் 4 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.6,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த
ஸ்மார்ட்போன் இ காமர்ஸ் வலைத்தளங்களிலும் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகளிலும் கிடைக்கின்றன. எனினும் ஸ்மார்ட்போனை பற்றி நிறுவனத்தின் வளைத்தளத்தில் பட்டியலிடப்படவில்லை. 

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் 4 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் 4 ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. 

கைபேசியில் ஆடியோ வெளியீடு அதிகரிக்க இரட்டை ஃப்ரண்ட் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் மற்றும் சர்க்கஸ் லாஜிக் Wolfsan ஸ்டீரியோ DAC (WM8918) ஆகியவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு, வருகிறது. துரதிஷ்டவசமாக ஸ்மார்ட்போனின் உள்ளடங்கிய சேமிப்பு பற்றி விரிவாக குறிப்பிடப்படவில்லை. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் 4 ஸ்மார்ட்போனில் நியூஸ்ஹன்ட், Paytm, Dr. சேஃப்டி, ஸ்னாப்டீல், Saavn, ஆப் சென்டர், MAD, ஆஸ்க் மீ, கிளீன் மாஸ்டர், குயிக்கர் மற்றும் Chaatz போன்ற அப்ளிக்கேஷன்கள் ஏற்றப்பட்டு வருகிறது. 

இந்த ஸ்மார்ட்போனில் 2000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, Wi-Fi 802.11 b/ g/ n, ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ், ப்ளூடூத், FM ரேடியோ, ஜிஎஸ்எம் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. மேலும், இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் 4 ஸ்மார்ட்போன் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. 

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் 4 ஸ்மார்ட்போன் முக்கிய குறிப்புகள்:

  • 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே,
  • 1ஜிபி ரேம்,
  • 1.3GHz குவாட் கோர் ப்ராசசர்,
  • 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 2- மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு,
  • 3ஜி,
  • Wi-Fi 802.11 b/ g/ n,
  • ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ்,
  • ப்ளூடூத்,
  • FM ரேடியோ,
  • ஜிஎஸ்எம்,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்,
  • 2000mAh பேட்டரி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget