பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் சமீபகாலமாக நிம்மதி இழந்து காணப் படுகிறார்கள். காரணம்
நிறைய இருக்கிறது. குழந்தைகள் கடத்தல், பாலியல் பலாத்காரம், வழி தெரியாமல் தொலைந்து போதல், கூடா நட்பு போன்ற பல காரணங்கள் பெற்றோரை வாட்டி எடுக்கின்றன.
பள்ளிக்கு செல்லும் குழந்தை பள்ளிக்குத்தான் செல்கிறதா? சினிமா பார்க்க தியேட்டருக்குச் செல்கிறதா அல்லது கூடா நட்பு வட்டத்துடன் சுற்றுகிறதா? இவை எல்லாவற்றையும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே கண்காணிக்கலாம். இதற்காக ‘சிட்ரோக்கர்’ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்தக்கருவியை குழந்தைகளின் இடுப்பில் கட்டி விடுவார்கள்.
பெரிய குழந்தைகள் என்றால் அவர்கள் தெரிந்தே தவறு செய்பவர்களாக இருந்தால், அவர்களுக்குத் தெரியாமல் தான் இந்த கருவியை வைக்க வேண்டும். குழந்தைகள் செல்லும் இடங்களில் இருந்து பெறப்படும் சிக்னல்கள் மூலம் குழந்தை எங்கே இருக்கிறது என்பதைக்கண்டு கொள்ளலாம். மொபைல் திரையிலும், கம்ப்யூட்டர் திரையிலும் இந்த தகவலைப் பெறலாம்.
கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு ஒழுங்காக செல்கிறார்களா என்பதையும் பெற்றோர்கள் கண்டுபிடித்து விடலாம். இந்தக் கருவியை கொண்டு மார்க்கெட்டிங் வேலையில் இருக்கும் விற்பனை பிரதிநிதிகள் ஒழுங்காக களத்தில் இறங்கி வேலை செய்கிறார்களா என்பதை மேலதிகாரிகள் கண்டுபிடித்து விடலாம்.
மேலும் வீட்டிற்குள் இருக்கும் கணவனோ, மனைவியோ தங்கள் துணை அலுவலகத்திற்கு சென்றிருக்கிறதா அல்லது வேறு எங்குமா என்பதையும் இது தெரிவித்துவிடும். இனி வருங்காலத்தில் யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது.

கருத்துரையிடுக