லட்சுமிமேனனிடம் ரொமான்ஸ் செய்த நடிகர்

ரொமான்ஸ் பண்ணுவதற்கு நேரம் காலமும் கிடையாது. வயது வரம்பும் கிடையாது என்பார்கள். ஆனபோதும் பெரும்பாலான சினிமாக்களில்
திருமணத்திற்கு முந்தைய காலகட்டத்து ரொமான்ஸைதான் அதிகமாக காண்பித்து வருகிறார்கள். ஆனால், கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்தில் திருமணத்திற்கு பிறகு நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளையே அதிகமாக படமாக்கியிருக்கிறார்கள். அந்த வகையில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக கார்த்தியுடன் செம ரொமான்ஸ் செய்துள்ளாராம் லட்சுமிமேனன். இந்த விசயத்தில் கார்த்தியும் சளைத்தவர் இல்லை என்பதால், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு நடித்த காட்சிகளில் அதிக நெருக்கம் காட்டி ரொமான்ஸ் செய்திருக்கிறார்களாம். அதுவும், படம் பார்க்க வரும் கணவன்-மனைவிகளுக்கு ரொமான்ஸ் ஆசையை மீண்டும் தூண்டி விடும் வகையில் கிளுகிளுப்பாக நடித்திருக்கிறார்களாம். அந்த வகையில், கார்த்திக் சில காட்சிகளில் மீசையை முறுக்கிக்கொண்டு அலைந்தாலும் அவரை தனது முந்தானையால் கட்டிப்போட லட்சுமிமேனன் காட்டும் ரொமான்ஸ் படுசூப்பராக வந்திருக்கிறதாம். அந்த அளவுக்கு வெட்கம், காதல், மோகம் என மூன்றையும் தனது முகபாவனையில் பிழிந்து ஊற்றியிருக்கிறாராம் லட்சுமிமேனன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget