2014ம் ஆண்டு தெலுங்கில் ராம்கோபால்வர்மா இயக்கி வெளியான படம் ஐஸ்கிரீம். அப்படத்தில் நவ்தீப்- தேஜஸ்வி நடித்திருந்தனர். 2013ல்
தெலுங்கில் தங்கை வேடத்தில் அறிமுகமான இவர், அதையடுத்து மனம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதற்கடுத்து ஹார்ட் அட்டாக் படத்தில் கதாநாயகி அந்தஸ்து பெற்ற இவரை தனது ஐஸ்கிரீம் படத்தில் அதிரடியான நாயகியாக களமிறக்கினார் ராம்கோபால்வர்மா. அந்த படத்தின் நாயகன் நவ்தீப்புடன் ஒரு பாடலில் ஐஸ்க்ரீம்மில் குளிப்பது போன்று நடித்து ஆந்திர ரசிகர்களை ஜில்லிட வைத்தார் தேஜஸ்வி. விளைவு, அப்படமும் பாக்ஸ் ஆபீசில் மாபெரும் வெற்றி பெற்றது. விளைவு, அதையடுத்து, தெலுங்கில் அரை டஜன் படங்களில் கமிட்டான அவர் தற்போது முன்னணி நடிகையாகி விட்டார். அதோடு தமிழிலும் காலூன்ற ஆசைப்பட்ட தேஜஸ்வி, தமிழில் தற்போது நட்பதிகாரம் 79 என்ற படததில் நடித்துள்ளார். கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்தவேளை, உற்சாகம் ஆகிய படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
நட்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்திலும் ஒரு குத்துப்பாட்டில் அதிரடியான நடனமாடியிருக்கும் தேஜஸ்வி, இதன்மூலம் கோலிவுட் ரசிகர்களையும் கலக்கி எடுக்க முடியும் என்று தொடை தட்டியிருப்பவர், இந்த படம் வெளியான பிறகு மீண்டும் தமிழில் ஒரு மெகா படத்தில் நடிப்பதற்கும் அட்வான்ஸ் வாங்கி விட்டாராம்.

கருத்துரையிடுக