இந்தியாவில் இணைய தளம் மூலம் வர்த்தகத்தினை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் ப்ளிப் கார்ட் மற்றும் மிந்த்ரா (Flipkart & Myntra) நிறுவனங்கள், சென்ற வாரம் தங்கள் மொபைல் இணைய தளங்களை மூடிவிட்டு, அதற்குப் பதிலாக, மொபைல் போனில் பயன்படுத்த ''ஆப்ஸ்” என அழைக்கப்படும் தனி அப்ளிகேஷன் புரோகிராமினை டவுண்லோட் செய்திடத் தன் வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளன.
மொபைல் வழி இணைய இணைப்பும் பயன்பாடும் புயல் வேகத்தில் பெருகி வருவதால், இந்த முடிவினை, இரு நிறுவனங்களும் எடுத்துள்ளன. வரும் 2019 ஆம் ஆண்டில் 65.1 கோடி ஸ்மார்ட் போன் பயனாளர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நான்கு ஆண்டுகளில், தற்போது இருப்பவர்களைக் காட்டிலும் 13 பங்கு அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்கள் இருப்பார்கள். இவர்கள் தங்கள் இணைய தளத்தில் எளிதாக இணைய, ''ஆப்ஸ்” எனப்படும் அப்ளிகேஷன் வழி வரட்டும் என இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதனால், பயன்பாடு எளிதாக இருப்பதுடன், வாடிக்கையாளர்கள், தங்களுடனேயே அனைத்து வர்த்தகத்தினையும் மேற்கொள்ள ஒரு தொடக்கம் ஏற்படும் என்றும் கருதுகின்றனர். வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான முறையில் சேவை செய்திட, இதுவே குறைந்த நேரம் எடுக்கும். வாடிக்கையாளர்களுக்கும் இதுவே சிறந்த, எளிய வழியாக இருக்கும்.
மேலும் தற்போது 90% இணைய இணைப்பும், 80% வர்த்தகமும் தற்போது மொபைல் வழியாகத்தான் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. IAMAI மற்றும் IMRB International ஆகிய அமைப்புகளின் கணிப்பு படி, இந்தியாவில் இணைய வர்த்தகம் 33% அளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது 2015 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ. ஒரு லட்சம் கோடியைத் தாண்டும்.
இவ்வாறு மொபைல் ஆப் வழி வர்த்தகத்தினை மேற்கொள்ள எடுத்திருக்கும் நடவடிக்கை இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் வரவேற்கப்படும் என இப்பிரிவில் ஆய்வு மேற்கொண்டிருப்பவர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும், இந்திய வாடிக்கையாளர்கள், மொபைல் போனில் அப்ளிகேஷன்கள் வழியாக மட்டும் வர்த்தகம் மேற்கொள்வார்களா என்பது விவாதத்திற்குரியதே. இப்போது, மொபைல் வழி வர்த்தகம் மேற்கொள்பவர்களில், 71% பேர் பிரவுசர் வழியாகவும், 29% பேர் அப்ளிகேஷன்கள் வழியாகவும் பொருட்களை வாங்குகின்றனர். இவர்கள் இணைய தள வர்த்தக நிறுவனங்களின் கட்டாயத்திற்காக மாறுவார்களா? அல்லது வேறு வர்த்தக தளங்களுக்குச் செல்வார்களா என்பதற்கான பதிலை இனிமேல் தான் கண்டறிய வேண்டும்.
இதனையும் தாண்டி, ப்ளிப் கார்ட் தன் டெஸ்க்டாப்பில் செயல்படும் இணையதளத்தினையும் மூடி, மொபைல் ஆப் வழி மட்டுமே வர்த்தகத்தைத்
தொடரலாம் என்றும் ஓர் உறுதிப்படுத்தப்படாத தகவல் கூறுகிறது. ப்ளிப்கார்ட் வசம் தற்போது 55 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள், எந்த தயக்கமும் இன்றி, ப்ளிப்கார்ட் சொல்வதைக் கேட்டு மாறலாம் என்ற எதிர்பார்ப்பும், இணைய வர்த்தகச் சந்தையில் உலவுகிறது.
ஆனால், இது சரியான முடிவா என எண்ணுகையில், 'ஆம்' எனப் பதில் அளிக்க இயலவில்லை. மொபைலில் செயல்படும் ஆப் வழி மட்டுமே வர்த்தகம் என்றால், வாடிக்கையாளர்கள், அமேஸான் டாட் இன் போன்ற டெஸ்க்டாப் வர்த்தக இணைய தளங்களுக்குச் சென்றுவிடுவார்கள். உலக அளவில், இயங்கும் இணைய வர்த்தக தளங்களான Amazon, Ebay, Target, Costco, Alibaba, Walmart, Etsy, Shop, Overstock, BestBuy ஆகியவற்றை எடுத்துக் கொண்டால், அவை மொபைல் ஆப்ஸ், மொபைல் வெப்சைட், டெஸ்க்டாப் வெப்சைட் என மூன்றையுமே வைத்துள்ளதைக் காணலாம். இவை அனைத்துமே, உலக அளவில் மொபைல் பயன்பாடு மிக அதிகமாக உள்ள அமெரிக்காவில் இயங்குபவை ஆகும். இந்தியாவுடன் ஒப்பிடுகையில், அங்கு மிக அதிகமான மொபைல் வழி பயனாளர்கள் இயங்கி வருகின்றனர். இருப்பினும், இந்த நிறுவனங்கள் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் வழி தளங்களை மூடவில்லை. மொபைல் ஆப் வழியாக கிடைக்கும் வர்த்தகம், மற்ற வழிகளில் கிடைக்கும் வர்த்தகத்தைக் காட்டிலும் அதிகமாகவே இருந்தாலும், மற்ற வழிகளை இவை மூடவில்லை.
எனவே, ப்ளிப் கார்ட் மற்றும் மிந்த்ரா நிறுவனங்களின் ”ஆப்ஸ்” வழி முயற்சி வெற்றி பெறுமா என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

கருத்துரையிடுக