அனைவரும் எதிர்பார்த்தபடி, லெனோவா ஏ 7000 ஸ்மார்ட் போன், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவிலான
சென்ற கருத்தரங்கில் இது காட்சிக்குத் தரப்பட்டது. இதில் 5.5 அங்குல ஹை டெபனிஷன் திரை, 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பின்புறக் கேமரா, 5 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா தரப்பட்டுள்ளன.
இது ஒரு எல்.டி.இ. அலைவரிசையில் இயங்கும் 4ஜி போன். டோல்பி லேபரட்டரீஸ் அண்மையில் வெளியிட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான டோல்பி ஆட்மாஸ் இசை அமைப்பு கொண்டு முதலில் வெளி வந்துள்ள ஸ்மார்ட் போன் இதுதான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தும் வசதி உள்ளது.
இதில் இரண்டு மைக்ரோ சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 152.6 x 76.2 x 7.9 மிமீ. எடை 140 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., 3ஜி, வை- பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,900 mAh திறன் கொண்டது.
கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் போன் இந்தியாவில், ரூ.8,999க்குக் கிடைக்கிறது. இதனை ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளம் மூலம் ஏப்ரல் 15 முதல் பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக