‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் சார்மி. அதைத்தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில்
மட்டுமே நடித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தற்போது தெலுங்கில் ‘ஜோதி லட்சுமி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான சண்டை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் துணை நடிகர் ஒருவர் ஹாக்கி பேட்டால் சார்மியின் தலையில் அடிப்பதுபோல் ஒரு காட்சி உருவாக்கியுள்ளார்கள். இந்த காட்சியில் அந்த துணை நடிகர் தவறுதலாக முகத்தில் அடித்துவிட்டார். இதனால் சார்மிக்கு ரத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
உடனே படக்குழுவினர் சார்மியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக