டூயட்டில் கிக்காகும் ராகுல் ப்ரீத்தி சிங்

தெலுங்கு திரையில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் பல படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் நடித்து
வருகின்றார். நடிகர் ரவி தேஜாவுடன் ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்திருக்கும் கிக் 2 படம் விரைவில் வெளிவரவுள்ளது. அப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி நடித்து வருகின்றார். இயக்குநர் ஸ்ரீனு வைதலு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராம் சரணுடன் டூயட் பாட மே 15 ஆம் தேதி ராகுல் ப்ரீத்தி சிங் ஸ்பெயின் நாட்டிற்குச் செல்லவுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் ராகுல் ப்ரீத்தி சிங் லண்டன் பறந்து ஜூனியர் என்டிஆருடன் டூயட் பாடவுள்ளார். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget