ஹைபன்: வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு
செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.
இதற்கு அந்த ஹைபன் அல்லது டேஷ் அமைக்கையில் கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளை ஒரு சேர அழுத்திக் கொண்டு அமைக்க வேண்டும். பிரிக்க முடியாத ஹைபன்களை வேறு ஒரு வகையிலும் அமைக்கலாம்.
1. இன்ஸெர்ட் மெனு சென்று சிம்பல் என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இன்ஸெர்ட் சிம்பல் டயலாக் பாக்ஸைக் கொடுக்கும்.
2. இந்த சிறிய விண்டோவில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. இதன் பின் நான் பிரேக்கிங் ஹைபன் கேரக்டரை ஹைலைட் செய்திடவும்.
4. பின்னர் இன்ஸெர்ட் என்பதில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து கேன்சல் என்பதில் கிளிக் செய்வதன் மூலம் டயலாக் பாக்ஸை மூடவும்.
சுருக்கமாகச் சில குறிப்புகள்: வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.
ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல alt + Ctrl + Page Down அழுத்தவும்.
வேர்ட் ஸ்பெல் செக்கர்: வேர்ட் புரோகிராம், ஆங்கில எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்கு, மிகத் திறமையாகச் செயல்படும் ஸ்பெல் செக்கர் ஒன்றைக் கொண்டுள்ளது. மிக நன்றாகவே அதுவும் செயல்படுகிறது. ஆனால், நாம் சில சொற்களைச் சுருக்கி அக்ரோனிம் (acronym) எனப்படும் சுருக்குச் சொற்களைத் தருகையில் அவற்றையும் பிழை எனக் காட்டுகிறது. வேர்ட் இவற்றைக் கணக்கில் கொள்ளாமல், ஸ்பெல் செக் செய்து பிழைகளைக் காட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால், கீழ்க்காணும் செயல்முறைகளை அமைத்திட வேண்டும்.
1. Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல் ஆபீஸ் பட்டனை கிளிக் செய்து, மீண்டும் Word Options என்பதில் கிளிக் செய்து திறக்கவும். வேர்ட் 2010ல், ரிப்பனில், File டேப்பினைத் தேர்ந்தெடுத்து, அதில் Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், இடது புறம் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு Ignore Words in UPPERCASE என்னும் செக் பாக்ஸில் ஒரு டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
4. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதில் என்ன பிரச்னை என்றால், சுருக்குச் சொல் இல்லாமல், ஏதேனும் கட்டுரை அல்லது பாரா தலைப்பினை நீங்கள் பெரிய எழுத்துகளில் அமைக்கும்போது, அவற்றையும் ஸ்பெல் செக்கர் கண்டு கொள்ளாமல் விட்டுவிடும். நீங்கள் தான் அதனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள அமைப்பினை நீக்கி செயல்பட வேண்டும்.

கருத்துரையிடுக