மொபைல் போன்களும், இணையப் பயன்பாடும் வேகமாக அதிகரித்து வருவதால், இணையம் வழி பொருட்கள் விற்பனை, இந்த ஆண்டு
இறுதிக்குள் ரூ. ஒரு லட்சம் கோடியை எட்டும் என IAMAI மற்றும் IMRB International அமைப்புகள் அறிவித்துள்ளன. சென்ற டிசம்பரில் இந்த சந்தையின் விற்பனை ரூ. 81,525 கோடியாக இருந்தது.
2010 ஆம் ஆண்டு ரூ. 26,263 கோடியாக இருந்த இந்த சந்தை, 2012 ஆம் ஆண்டில் ரூ. 47,349 கோடியாக இருந்தது. 2013ல், இது ரூ. 53,301 கோடியாக உயர்ந்தது. இதில் பயணம் சார்ந்த விற்பனை 69% (ரூ. 50,050 கோடி) ஆகவும், மற்றவை 21% (ரூ.31,245 கோடிஆகவும் இருந்தன. மற்றவை பிற பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவில், குறைந்த பட்சம் மாதம் ஒருமுறை இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் தொகை 23.2 கோடியாக உள்ளது.
இவர்களில் 6.67 கோடி பேர், ஏதேனும் ஒரு பொருளை, இணையம் வழி வாங்குபவர்களாக உள்ளனர். 96 லட்சம் பேர் தாங்கள் வாங்க விரும்பும் பொருள் குறித்த தேடல்களை மேற்கொண்டவர்களாக உள்ளனர். இவர்கள் எந்த பொருளையும் வாங்கவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக