சிவந்த நிறத்தழகி செவத்த உதட்டழகி

நிறம் சார்ந்த ஆதிக்கம் சமூகத்தின் எல்லாத் தட்டு மக்களிடமும் மேலோங்கி இருக்கிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி எல்லா
இடங்களிலும் நிற வேறுபாடு குறித்த விருப்பு வெறுப்புகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு சமூக நிகழ்வும் மாற்றங்களும் அதைத்தான் சொல்கின்றன.  

தொலைக்காட்சி விளம்பரங்களில் பெரும் பாலானவைச் சிவப்பழகு குறித்தவையாகவே இருக்கின்றன. சிவப்பாக இருந்தால் மட்டுமே ஒரு பெண்ணுக்குக் கல்வி, வேலை, நண்பர்கள், திருமணம் உட்பட அனைத்தும் சாத்தியம் என்பது போலவே பல விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன. சிவப்பாக இருந்தால் மட்டுமே தன்னம்பிக்கை சாத்தியம் என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும் விளம்பரங்களும் உண்டு. 

ஆண்களுக்கான பிரத்யேக சிவப்பழகு க்ரீம்களும் சந்தைக்கு வந்துவிட்டன. மூன்று வேளை உணவில்லாமல்கூட இருந்துவிடலாம், சிவப்பழகு இல்லாமல் இருக்கவே கூடாது என்கிற தொனியில்தான் விளம்பரங்கள் கூச்சலிடுகின்றன. காட்சி ஊடகம் மட்டுமல்ல, நம்மைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளில் நிறம் என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தன் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. 

வீடு, அலுவலகம், பொதுவெளி என்று எங்கேயும் எப்போதும் சிவப்புக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கிறவர்கள், கறுப்பு நிறத்தை அத்தனை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதில்லை. சிவந்த, அழகான என்பவை மட்டும்தான் மணப்பெண்ணுக்கான தகுதிகளா? பல்வேறு நிறுவனங்களில் வரவேற்பாளராகவும், விற்பனைப் பிரிவில் வேலை செய்யவும் சிவந்த நிறம்தான் அடிப்படைத் தேவையா? அங்கே அறிவு ஏன் இரண்டாம்பட்சமாக்கப்படுகிறதா? 

அறிவைவிட நிறம் சக்தி வாய்ந்ததா? பெண்களுக்கு இருக்கும் திறமையை பார்த்து அவர்களுக்கு மதிப்பு கொடுங்க. அவர்களின் நிறத்தை பார்த்து அல்ல. பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி கொண்டிருந்தாலும் நிறத்தால் பல துறைகளில் அவர்கள் ஓரம் கட்டப்படுவதும் சத்தமில்லாமல் நடந்து கொண்டே தான் இருக்கிறது. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget