செவ்ரோலெட் நிறுவனம் தனது சமீபத்திய கண்டுபிடிப்பான செவ்ரோலெட்-FNR என்று அழைக்கப்படும் எதிர்காலத்தின் சுய ஓட்டுநர் மின்சார காரை
அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற சுவாரஸ்யமான அம்சங்களுக்கு மத்தியில் எதிர்காலத்தின் இந்த கார் கேப்ஸ்யூல் வடிவமைப்பு கொண்டுள்ளது. தற்போது இந்த காரை பற்றிய அறிவிப்பு மட்டுமே உள்ளது, ஆனால் வரவிருக்கும் சுய ஓட்டுநர் காரின் தோற்றம் மற்றும் சில உற்பத்தியாளர்களை பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் செவ்ரோலெட்-FNR காரை ஷாங்காயில் இந்த வாரம் காலா நைட் நிகழ்வில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது GM ன் பான் ஏசியா தொழில்நுட்ப தானியங்கி மையத்தின் (PATAC) கூட்டு முயற்சியின் மூலம் ஷாங்காயில் உருவாக்கப்பட்டது. செவ்ரோலெட் காரை பார்ப்பதற்கு எதிர்காலத்தின் மொபைலிட்டி வடிவில் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. நாளைய இளைய நுகர்வோருக்கு புதுமையான கார் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனிப்பட்ட, நுண்ணறிவு வாகனத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டது என்று GM கூறியுள்ளது. இதில் கிரிஸ்டல் லேசர் ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் கொண்டுள்ளது, மற்றும் மேல்நோக்கி திறக்கும் 'டிராகோன்ஃப்லை' டூயல் ஸ்விங் கதவுகள் கொண்டுள்ளது.
காரில் மேக்னடிக் ஹப்லஸ் எலெக்ட்ரிக் வீல் மோட்டார்கள் மற்றும் ஒரு வயர்லெஸ் ஆட்டோசார்ஜிங் அமைப்பு உள்ளது. சுய ஓட்டுநர் முறையில் சென்சார்கள் மற்றும் ரூஃப் பொருத்திய ரேடார் பயன்படுத்தி சுற்றுப்புறப் பகுதிகளை கண்டறிய மேப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், ஐரீஸ் ரெகக்னைசேஷன் பயன்படுத்தப்பட்டிருப்பதால் உங்கள் கண்களின் கருவிழிகளால் பார்த்துக்கூட காரை திருப்ப முடியும். சுய ஓட்டுநர் முறையில் கார் சென்று கொண்டிருக்கும் போதே ஓட்டுநர், முன் இருக்கையை 180 டிகிரி கோணத்தில் திருப்பி பின் இருக்கைகளில் இருக்கும் பயனிகளை பார்த்து பேச முடியும்.
இதில் சைகை (gesture) கட்டுப்பாடு வசதி பயன்படுத்தப்பட்டிருப்பதால் ஓட்டுநர் எப்போது வேண்டுமானாலும் தானியங்கி கட்டுப்பாடு முறையை மாற்றி மேனுவல் முறையில் காரை ஓட்ட முடியும். செவ்ரோலெட் கார் பற்றிய அறிவிப்பு மட்டுமே அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது, ஆனால் வெளியீட்டு தேதி அல்லது உற்பத்தி செய்ய திட்டமிட்ட தேதி போன்ற தகவல்களை இதுவரை அறிவிக்கவில்லை.

கருத்துரையிடுக