சென்னையில் ஒரு பெண் கூட்டத்துடன் வரும் நகரப்பேருந்தில் ஏறினால் இறங்குவதற்குள் ஒரு வழியாகிவிடுவார்கள். காரணம் பேருந்தில் வரும்
இடிமன்னர்கள். பெண்களை உரசும் இந்த மனித மிருக ஜென்மங்களின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்குள் பெண்களுக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது.
சென்னையில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ளஅனைத்து இடங்களில் இந்த பிரச்சனை தான் நடக்கிறது. இதற்கு தகுந்த நடவடிக்கையை காவல் துறை எடுத்து வந்தாலும், அதை முறையாக கடைபிடிப்பதில்லை. பிரச்சனை வரும் போது மட்டுமே தலையை காட்டுகிறார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா முழுவதும் உள்ள பெரிய நகரங்களில் உள்ள பேருந்துகளில் பெண்களுக்கு மட்டும் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளதாம்.
சென்னையில் இது போல் மகளிருக்கு மட்டும் பேருந்துகள் ஒடுகின்றன என்றாலும் அவை அத்திப்பூத்தார் போல் தான் இயங்குகின்றன. அதுவும் கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மட்டும் ஒன்றோ இரண்டோ வருகின்றன. ஆனால் அதுவும் தினமும் சரியான நேரத்தில் வருவதில்லை. இதனால் அந்த பேருந்துகளை விட்டு விடும் பெண்கள் மற்ற பேருந்துகளில் ஏற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.
அதுபோல் ரெயில்களிலும் பெண்களுக்கான பெட்டியின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. பெண்கள் பெட்டியில் பயணம் செய்யவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். இருபாலரும் சேர்ந்து பயணிக்கும் பெட்டிகளில் ஆண்களின் காராமான பார்வையும், நடவடிக்கையும் பயத்தை அளிப்பதாக பெண்கள் கூறுகிறார்கள்.
பெண்கள் இப்படி மகளிர் மட்டும் என்பதை நோக்கி ஓடுவது நல்லதல்ல. மாற வேண்டியது பெண்கள் அல்ல. ஆண்கள் தான்... அவர்களின் மனநிலையில் வக்கிர பார்வையும். தான்..

கருத்துரையிடுக