அந்தம்மா அளவுக்கு என்னால முடியாது விலை மாது வேட நடிகை

திலகர் படத்தில் கிஷோரின் மனைவியாக கிராமத்து கதாபாத்திரத்தில் நம் மண்ணின் உணர்வுகளை உள்வாங்கி பிரதிபலித்த அனுமோல், மலையாள
நடிகை என்றால் நம்ப சிரமமாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்து முடிப்பவர் என்பதால் தான் எடிட்டர் விஜய் ஆண்டனி, தமிழில் தற்போது தான் இயக்கிவரும் படத்தின் கதாநாயகியாக இவரை ஒப்பந்தம் செய்தார். கடந்த 2012ல் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் படமான 'ஷட்டர்' தான் தற்போது விஜய் ஆண்டனி இயக்கத்தில் தமிழில் ரீமேக்காகி வருகிறது.

இந்தப்படத்தில் விலைமாது கேரக்டரில் நடிக்கிறார் அனுமோல். மலையாளத்தில் இதே விலைமாது கேரக்டரில் சஜிதா மாடத்தில் என்கிற துணை நடிகை சிறப்பாக நடித்திருந்தார். பெண்கள் ஜீன்ஸ் அணிவது குறித்து ஜேசுதாஸ் தெரிவித்த கருத்திற்கு அவரை கிண்டலடிக்கும் விதமாக எதிர்கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தினாரே ஒரு நடிகை, அவரே தான் இவர். அடிப்படையில் சஜிதா தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டும் கூட.. நடிப்பிற்காக கேரளா அரசு விருது பெற்றவர். அவர் அளவுக்கு அந்த கேரக்டரை என்னால் நடிக்க முடியுமா என்றும் தோன்றவில்லை என்கிறார் அனுமோல் தன்னடக்கத்துடன்..
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget