தமிழ் திரை ரசிகர்களால் ஆரம்பத்தில் கைவிடப்பட்ட நடிகை காஜல் அகர்வாலை காப்பாற்றியது தெலுங்கு திரை உலகம் தான். தெலுங்கு
திரையின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகை காஜல் நடித்த மகதீரா படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் தெலுங்கு திரையின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு காஜல் வெற்றி கண்டார். அதே வேகத்தில் கோலிவுட் பக்கம் திரும்பியவருக்கு தயாரிப்பாளர்கள் சிகப்பு கம்பளமே விரித்தனர். தமிழ் திரையில் வெற்றி படங்களில் நடித்த காஜலுக்கு ரசிகர்களிடம் தற்போது ,மவுசு குறைந்து விட்டதாக தெரிகின்றது. காரணம் அண்மையில் டோலிவுட்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிக்காக நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் காஜல் முதல் 10 இடங்களை பிடிக்க தவற விட்டிருக்கின்றார். தெலுங்கு திரையின் முன்னணி நடிகைகளும், வளரும் நடிகைகளும் முதல் 10 இடங்களைப் பிடித்து விட்டனர். கோலிவுட்டிலும் நடிகை காஜல் அகர்வாலுக்கு இதே நிலைமை தான் என்று கூறப்படுகின்றது. நடிகர் தனுஷுடன் மாரி படத்தில் நடித்த காஜல் தற்போது விஷாலின் பாயும் புலி படத்தில் நடித்து வருகின்றார். அப்படத்திற்கு பின்னர் அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என தெரிகிறது.

கருத்துரையிடுக