லெனோவா K80 ஸ்மார்ட்போன்

ரஷ்யாவில் லெனோவா A5000 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, சீன நிறுவனம் தற்போது மற்றொரு ஸ்மார்ட்போனான K80 ஸ்மார்ட்போனை
அறிமுகப்படுத்தியுள்ளது. லெனோவா K80 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 30ம் தேதி முதல் நிறுவனத்தின் சொந்த நாட்டில் CNY 1,799 (சுமார் ரூ.18,400) விலையில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. லெனோவா K80 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. 

துரதிஷ்டவசமாக, நிறுவனம் லெனோவா K80 ஸ்மார்ட்போன் உலகளவில் கிடைக்கும் விவரங்களை பற்றி அறிவிக்கப்படவில்லை. லெனோவா K80 ஸ்மார்ட்போனி்ன் ஸ்டாண்டர்ட் பதிப்பில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. மேலும், CNY 1499 (சுமார் ரூ.15,300) விலையில் கிடைக்கிறது. 

ஆசஸ் ஜென் Fone 2 தொடர் போன்றே, லெனோவா K80 ஸ்மார்ட்போனிலும் இன்டெல் சிப்செட் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1080x1920 பிக்சல்கள் தீர்மதனம் கொண்ட 5.5 இன்ச் முழு ஹச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் 4ஜிபி ரேம் உடன் இணைந்து 64பிட் 1.2GHz குவாட் கோர் இண்டெல் ஆட்டம் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. 

லெனோவா K80 ஸ்மார்ட்போனில் மற்ற குறிப்பிடத்தக்க அம்சமாக, பெரிய 4000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிளைசேஷன்) கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. முன் எதிர்கொள்ளும் கேமராவை பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிப்படவில்லை. லெனோவா K80 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது மற்றும் 8.5mm தின் பாடி கொண்டுள்ளது. 

இது கருப்பு, வெள்ளி, மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் வருகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, ஜிபிஎஸ், ப்ளூடூத், மைக்ரோ-யூஎஸ்பி, ஜிஎஸ்எம் மற்றும் 3ஜி ஆகியவை வழங்குகிறது. மேலும் இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், அம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

லெனோவா K80 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

  • 1080x1920 பிக்சல்கள் தீர்மதனம் கொண்ட 5.5 இன்ச் முழு ஹச்டி டிஸ்ப்ளே,
  • 4ஜிபி ரேம்,
  • 1.2GHz குவாட் கோர் இண்டெல் ஆட்டம் ப்ராசசர்,
  • 13 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • Wi-Fi,
  • ஜிபிஎஸ்,
  • ப்ளூடூத்,
  • மைக்ரோ-யூஎஸ்பி,
  • ஜிஎஸ்எம்,
  • 3ஜி,
  • ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்,
  • 4000mAh பேட்டரி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget