தமிழக அரசியலில் புத்தம் புது டிரெண்ட்

தமிழக அரசியலில் பிரதான கட்சிகளான திமுக.,வும், அதிமுக.,வும் எப்போதும் எதிரும் புதிருமான இருந்து வரும் நிலையே பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பரஸ்பரம்
கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த காலம் போய், இப்போது பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொள்ளும் வழக்கும் வந்துள்ளது பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

தேசிய அரசியலில் ஆளும் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ளும் போது வணக்கம் சொல்வதும், நலம் விசாரித்துக் கொள்வதும் வழக்கமான நிகழ்வு. இது போன்ற அரசியல் நாகரிகம் தமிழகத்தில் வராதா என பலரும் கேட்டு வந்தனர். இந்த நிலை சட்டசபை தேர்தலுக்கு பிறகு மாறி வருகிறது. எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்கும் செயல்பாடு மாறி தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவிற்கு திமுக, பா.ஜ., என பாரபட்சமின்றி அழைப்பு அனுப்பப்பட்டது. காங்கிரசுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அரசியல் நாகரிகம் கருதி திமுக.,வும் அரசின் அழைப்பை ஏற்று, திமுக பொருளாளர் ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டார்.

மீண்டும் ஆட்சியை பிடித்த ஜெயலலிதாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து சொன்னார். இதே போன்று எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு ஜெயலலிதாவும் வாழ்த்து கூறினார். முதல் சட்டசபை கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.,வாக பதவியேற்க வந்த ஜெயலலிதாவும், ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளாக சட்டசபைக்குள் வராமல் இருந்த திமுக தலைவர் கருணாநிதியும் சட்டசபைக்குள் வந்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக் கொண்டார்.

இத்தகைய மாற்றம் ஆக்கபூர்வமான அரசியலுக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏற்பட்டு வரும் இந்த அரசியல் மாற்றத்திற்கு பலரும், கட்சி வேறுபாடின்றி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget