சட்டசபை தேர்தலால் கடந்த ஒரு மாதமாக டல் அடித்த தமிழக தியேட்டர்கள் இந்தவாரம் முதல் மீண்டும் களை கட்டும் என தெரிகிறது. அதை
மெய்பிக்கும் வகையில் வாரம் குறைந்தது மூன்று முதல் ஐந்து படங்களை ரிலீஸ் செய்யும் தமிழ் சினிமா, இந்தவாரம் வெள்ளிக்கிழமையான இன்று(மே 27ம் தேதி) 7படங்களை ரிலீஸ் செய்கிறது. இதில் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படம் தவிர்த்து மற்ற நான்கு படங்களும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள சின்ன பட்ஜெட் படமும், இரண்டு ஆங்கில படமும் அடக்கம்.
7 படங்கள் என்னென்ன.?
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா ஆகியோரது நடிப்பில் இரண்டு ஆண்டுகளாக இந்தா வரும், அந்தா வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இன்று விருந்து படைத்திருக்கிறது 'இது நம்ம ஆளு'. பாண்டிராஜ் இயக்கத்தில், காதல் கதையம்சம் உள்ள குடும்ப படமாக இது தயாராகி இருக்கிறது. நயன்தாரா-சிம்பு மீண்டும் இணைந்து நடித்திருப்பது இப்படத்திற்கான ப்ளஸ்.
இது நம்ம ஆளு தவிர புதுமுகம் விஜயகுமார் இயக்கி, நடித்துள்ள 'உறியடி', குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி தயாராகி உள்ள சிவா.ஜி. இயக்கியுள்ள 'சுட்டபழம் சுடாதபழம்', கேசவன் இயக்கத்தில், பாபி சிம்ஹா ஆரம்பகாலங்களில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தபோது உருவான 'மீரா ஜாக்கிரதை', சரவணபாண்டி இயக்கியுள்ள 'ஜெனிபர் கருப்பையா' போன்ற படங்களும் வெளியாகியுள்ளன.
இந்த ஐந்து தமிழ் படங்கள் தவிர்த்து 'ஆங்கிரி பேர்ட்ஸ்' என்று ஹாலிவுட் அனிமேஷன் படமும், டோனி ஜா நடிப்பில் 'நிழல் யுத்தம்' என்ற ஹாலிவுட் படமும் ரிலீஸாகியுள்ளது.

கருத்துரையிடுக