பேய் வேடத்தில் மிரட்டும் த்ரிஷா

கதாநாயகிகளின் மார்க்கெட் சரிவடையும் நேரத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க விரும்புவார்கள். இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருக்கிறார் த்ரிஷா.
தமிழ் சினிமாவில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா. இவரது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் 'நாயகி'. இது த்ரிஷாவின் 50 ஆவது படம்.

அரண்மனை 2, நாயகி படங்களைத் தொடர்ந்து 3 ஆவதுமுறையாக ஒரு பேய் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. இந்தப் படத்துக்கு 'மோகினி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சூர்யாவை வைத்து 'சிங்கம் 2' படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர்.மாதேஷ். ஒரு காலத்தில் இயக்குநர் ஷங்கருக்கு வலது கரமாக இருந்தவ மாதேஷ், பின்னர் அவரிடமிருந்து விலகி, விஜய்யை வைத்து மதுர, பிரசாந்த் நடித்த 'சாக்லேட்' உட்பட சில படங்களை இயக்கினார்.

அதன் பிறகு விநியோகஸ்தராக மாறிய ஆர்.மாதேஷ் பல வருட இடைவெளிக்குப் பிறகு மோகினி படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராகி இருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு ஜூன் 2 ஆம் தேதி முதல் லண்டனில் ஆரம்பமாகிறது தொடர்ந்து 40 நடைபெறுகிறது. அதன் பிறகு இந்தியாவில் 20 நாட்களும், பாங்காகில் 10 நாட்களும், பின்னர் மெக்சிகோவிலும் நடைபெறும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget