எளிமையாக மேக்கப் செய்ய வேண்டுமா

தினமும் சிம்பிளாக மேக்கப் செய்து வேலைக்குச் செல்கிறேன். நான் உபயோகிக்கிற காம்பேக்ட் திட்டுத்திட்டாகத் தெரிகிறது.  லிப்ஸ்டிக் சீக்கிரம் நீங்கிவிடுகிறது. காஜல் கண்களுக்கு அடியில்
வழிகிறது. சரியான முறையில் மேக்கப் போடும் எளிமையான டிப்ஸ் சொல்லுங்களேன்.

கன்சீலரையோ, ஃபவுண்டேஷனையோ இமைகளின் மேல் போடாதீர்கள். அது ஐ மேக்கப் செய்த பிறகு அங்கே மடிப்பு மடிப்பாக  கோடுகளைக் காட்டும்.உங்கள் முகத்தில் அதிக எண்ணெய் பசையான பகுதியில் (பெரும்பாலும் T ஸோன் எனப்படுகிற நெற்றியும் மூக்கும் இணைகிற இடமாகவே இருக்கும்) பவுடரை முதலில் டஸ்ட் செய்யுங்கள். பிறகு மற்ற இடங்களில் பிரஷ் கொண்டு டஸ்ட் செய்யுங்கள்.

உதடுகளுக்கு முதலில் ஒரு கோட் லிப்ஸ்டிக் தடவிவிட்டு, பிறகு அதன் மேல் கொஞ்சம் பவுடரை டஸ்ட் செய்யுங்கள். அதற்கு  மேல் இரண்டாவது கோட் லிப்ஸ்டிக் தடவுங்கள். இது உங்கள் லிப்ஸ்டிக் சீக்கிரம் அழியாமல் காக்கும். வாட்டர் ப்ரூஃப் போன்றும்  இருக்கும். கண்களின் வெளியே வழியாத காஜல் வகைகளை உபயோகிக்கலாம். அதே கலரில் ஐ ஷேடோவை அதன் மேல் தடவுவதும் காஜல் வழியாமல் காக்கும். ஸிக்ஸாக் பொசிஷனில் மஸ்காரா தடவலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget