முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்க வேண்டுமா

பொதுவாக சில பெண்களுக்கு முகத்தில் ரோம வளர்ச்சி அதிகமாக காணப்படும். இதற்கு காரணம் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றமே. எனவே முகத்தில் அரும்பு மீசை போல் வளர்ந்துள்ள
முடிகளை அகற்ற நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதோ வீட்டிலேயே நீங்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொண்டு எளிய முறையில் செய்வதற்கான வழிகள்: முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

* அரும்பு மீசைபோல் உள்ள முடிகளை அகற்ற கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன், காய்ச்சாத பால் 2 ஸ்பூன் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும் தினந்தோறும் இதுபோல் செய்து வந்தால் நாளடைவில் முடி உதிர்வதுடன், முடியின் வளர்ச்சி குறையும். மேலும் சருமம் அழகு பெறும்.

* எரியூட்டப்பட்ட சாணத்தின் சாம்பல் 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் ஆகியவை கலந்து முகத்தில் உள்ள ரோமங்கள் மீது தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முடி உதிர்ந்து சருமம் மென்மையாக காணப்படும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget