தேவைகள்தான் கண்டுபிடிப்புகளின் தாய் (Necessity is the mother of Invention) என்பார்கள். மனித நாகரிகம் கண்டுபிடிப்புகளின் பின்னால் பயணப்படத் தொடங்கியபோது, வாழ்க்கையையே
மாற்றியமைக்கும் மந்திர வித்தைகள் செய்தான் மனிதன். எவையெல்லாம் வாழ்க்கைக்கு உபயோகமாக இருந்து வந்தனவோ, அவையெல்லாம் நவீன அறிவியலில் வடிவம் மாறி வசதியைத் தந்து, மனிதனுக்கு வசதியையும் ஓய்வையும் தரத் தொடங்கிவிட்டன. உதாரணமாக அம்மியும் மாவரைக்கும் கல்லும் இடம்பெயர்ந்து மிக்ஸியும் கிரைண்டரும் இடம்பிடித்துக் கொண்டன. உங்களுக்குப் பயன்படும் பொருட்கள் பற்றி எல்லாமும் சொல்லப்போகும் முழுமையான வழிகாட்டி இது!
சந்தோஷமா ஒரு வாரம் வெளியூரு போய் சுத்திட்டு வந்து சூட்கேஸ்ல இருக்கிற துணியெல்லாம் வெளில எடுத்துப்போட்டு பார்த்தால்தானே தெரியுது... மனசுக்குள்ள கேள்வி வேற... இம்புட்டு துணியும் நாமளா போடறோம்? அந்தக் காலத்துல இலைதழையோட இருந்தவங்களை நினைச்சா பொறாமையா வருது... துணியே தொவைச்சி இருக்க மாட்டாங்க இல்ல? மந்தாரை இலை ஸ்கர்ட், வாழை இலை வேட்டி, மாவிலை கோர்த்து கச்சை... பனை ஓலையில் கால்சட்டை... இயற்கையே எத்தனை டிசைன் கொடுத்து இருக்கு? யூஸ் அன்ட்த்ரோடெக்னாலஜியை அழித்த அந்த முதல் நெசவாளி மேல் கொஞ்சம் கோபம் கூட வருது!
ஆற்றங்கரைகளில்தான் நாகரிகங்கள் தோன்றினவாம்... முதல்ல ஆற்றோரங்களில் மக்கள் வாழ்ந்தாங்க. அங்கயே அலசிப் போட்டு பிழிஞ்சுப்பாங்க... அடுத்து அழுக்கு இருந்தா கல்லுல அடிச்சு கசக்க ஆரம்பிச்சாங்க. இப்போ வரை அது தொடருது. அடுத்து கட்டையை வச்சு அடிச்சாங்க. சிலர் பெரிய கூடைல போட்டு ஊற வச்சு, மிதி மிதின்னு மிதிச்சு துவைக்கும் வழக்கமும் வந்துச்சு. இப்படித்தான் வீட்டு ஆளுங்களை துவைச்சு பிழியற வரலாறு ஆரம்பிச்சுதா என்று கேட்டா நான் பதில் சொல்ல மாட்டேன்! வெள்ளாவியை வச்சி இட்லி அவிச்சதுக்கு அப்புறம் வெள்ளாவி ஐடியா எக்குத்தப்பா யாருக்கோ ஆரம்பிக்க, அங்க தொடங்கி நாம சினிமா பாட்டுக்கு கூட அந்த ஐடியாவை எடுத்துகிட்டோம்.
அப்புறம் ஆற்றை விட்டு நகர நகர துணியை சுத்தம் செய்ய நிறைய வழிகளை யோசிச்சாங்க... நடுவுல ஒரு புண்ணியவான் சோப்பு கண்டுபிடிக்க, அப்ப சோப்பு போட ஆரம்பிச்ச மனுஷன் இன்னிக்கும் நிறுத்தல. துணிக்கு மட்டும்னு எடுத்துக்கங்க...நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்!
அப்படியே சோப்புத்தூள், சவுக்கார கட்டி , ப்ளீச், சாஃப்ட்னர் இன்னும் எத்தனையோ... தினம் ஒன்றாகக் களத்தில் இறங்கிக் கொண்டே இருக்கு. இப்பல்லாம் துணி துவைக்கிற செலவுக்கு பழையபடி ஆற்றுக்குப் போய் துவைக்கலாம் என்றால் ஆறே அழுக்கா ஓடுது. சரி, துவைக்க என்ன தீர்வுன்னு பார்த்து ஒரு ஆள் சைக்கிள் பெடல் மூலம் டிரம்மைசுத்த வச்சு துவைக்க ஒரு ஐடியா செய்தான். அன்னிக்குத்தான் முதல் வாஷிங் மெஷின் பிறந்துச்சு!
எத்தனையோ வருஷமாச்சு கண்டுபிடிச்சு. இன்னும் நம்ம வீட்டுக்கு வரலேன்னு நான் மூக்கு சிந்த, நம்ம வீட்டு ஆள் கர்ச்சீப் எடுத்துக் கொடுத்துட்டு ‘அம்மாடி ஆரம்பிச்சிடாதே... நீதான் ஒரு சட்டை அழுக்கை கூட அலசி ஆராய்ந்து, பீராய்ந்து பீஸ் பீஸ் ஆக்குவியே... நீயே ஒரு வாஷிங் மெஷின் பார்த்து நல்லதா சொல்லே’ன்னு வீட்டுல சொல்ல களத்தில் இறங்கிட்டேன். ‘நீ சரியா வாங்கிட்டா துவைக்கிறது என் பொறுப்பு’ன்னு சொல்ல, சவாலா எடுத்துகிட்டேன். ஒரு குடும்ப ஸ்திரீ சிறந்த இஸ்திரியா புகழ்பெற்ற ஹிஸ்டரிய தெரிஞ்சுக்க வேணாம் நீங்க? வாங்க அந்த கதைய உங்களுக்கும் சொல்றேன்!
ஆத்தாடி தல சுத்துது... செமி ஆட்டோமேட்டிக்காம், முழு ஆட்டோமேட்டிக்காம், டாப் லோடு, ஃபிரன்ட் லோடு, ட்ரையர் சேர்த்து, தனியா ட்ரையர்னு, தானே டிரம் ஓடுதுன்னு ஒரு ஆள், இன்னொருத்தர் குழந்தை கூட பக்கத்துல தூங்கும்னு கைய பிடிச்சு இழுக்க, இன்னொரு கம்பெனி நாங்கதான் உலகத்துக்கே மெஷின் விக்கிறோம், ரொம்ப நம்பகம் என்று சொல்ல, அடுத்து இன்னொரு ஆள் பபிள் வாஷ்னு நுரை நிறைய வரும் என்று சொல்ல... நமக்கு நாக்கு நுரை தள்ளுது, எதை எடுக்க எதை விட என்று.
எனவே, வழக்கம் போல அலசி ஆராய களத்தில் இறங்கிட்டா இந்த அஞ்சல... என்னமோ டாப் லோடை பார்த்தா தலைய திறக்கிறது போலவும், ஃபிரன்ட் லோடை பார்த்தா வயிற்றை திறப்பது போலவும் தோணுதே. என்ன டிசைன் இதெல்லாம்? எப்படி தேர்வு செய்றது நாம? சரி... இப்ப எனக்கு என்ன வேணும்னு யோசிக்கணும். முதல்ல என்ன இருக்குன்னு விவரம் தெரியணும் இல்ல.
செமி ஆட்டோமேட்டிக்கா இல்ல முழு ஆட்டோமேட்டிக்கான்னு தீர்மானம் செய்யணும். அதுல ரெண்டு டிரம் இருக்கும். துணியை நாம்தான் எடுத்துப் போடணும். தண்ணி ஊற்றணும். சில வேலைகள் செய்யணும். நேரம் செலவழிக்கணும். பெரிய அளவுல இருக்கும். ஆனால், விலை குறைவு. முதல்ல பட்ஜெட். எத்தனை ரூபாய்ல வாங்கலாம். அதுக்குள்ள உள்ள மாடல்கள் மட்டும் பார்க்கணும். 3,800 ரூபாயில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்குது. காசு இருக்குன்னு 80 ஆயிரம் ரூபாய்க்கும் வாங்க முடியாது. என்ன தேவைன்னு பார்க்கணும் இல்ல.
வீட்டுல தண்ணி நல்லா வருதா? நாம தண்ணியைப் பிடிச்சுக் கொட்டணுமா? இல்ல நேரா நேரத்துக்கு மட்டும்தான் வருமா? தண்ணி தொடர்ந்து வந்தா மட்டுமே ஃபிரன்ட் லோடு வாங்கணும். இல்லாட்டி டாப் லோடுதான் நல்லது. அடுத்து எத்தனை பேரு வீட்டுல? இரண்டு பேர் இருக்கிற வீட்டுக்கு 7 கிலோ மெஷின் தேவையான்னு யோசிக்கணும். 8 பேர் வீட்டுல இருந்தா கொஞ்சம் கொஞ்சமா துவைக்க முடியாது. மெஷினுக்கு கெபாசிட்டி பார்க்க ஆரம்பிச்சோம். மனுஷனோடு துணி தோய்க்கிற கெபாசிட்டி அவுட். உதாரணமா குழந்தைகள் இருக்கும் வீட்டில் மூன்று, நான்கு நபர்கள் என்றாலும் துணி அதிகமா இருக்கும் . அட்டவணையை பாருங்க...
துணி துவைக்கும் கால இடைவெளி குடும்பநபர்களின் எண்ணிக்கை இயந்திரக் கொள்ளளவு
வாரம் மூன்று முறை 2 3 Kgs
4 4 to 6 Kgs
6 7 to 8 Kgs
>8 >8
வாரம் இரு முறை 2 4 to 6 kgs
4 >6 kgs
6 >8 kgs
>8 >8 kgs
வாரம் ஒரு முறை மட்டுமே துவைக்க இயலும் என்பவர்கள் பெரிய அளவில் வாங்கிக் கொள்வது நல்லது. எடுத்துக்காட்டாக ஒரு டீ-ஷர்ட் சராசரியா கால் கிலோ இருக்கும். ஜீன்ஸ் முக்கால் கிலோ. சட்டை கால் முதல் அரை கிலோ வரை. டபுள் பெட்ஷீட் முக்கால் கிலோ. காட்டன் சாரி அரை கிலோ. பெரிய பூத்துவாலை அரை முதல் முக்கால் கிலோ.
எடுத்துக்காட்டா 6 கிலோ மெஷின் என்றால் நாலு பனியன், ஒரு பெட்ஷீட், இரண்டு ஜீன்ஸ், புடவை இரண்டு, பெரிய துண்டு மூன்று பிறகு சிறு உடைகள் மற்றும் கர்சீப் வகையறாக்கள்... இவ்வளவுதான் போட முடியும். அப்படியே இக்கால வாஷிங் மெஷின் மாடல்களை ஒரு ஒப்பீடு செய்வோம்!

கருத்துரையிடுக