சவால் நாயகியான ஸ்ருதிஹாசன்

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் ஸ்ருதிஹாசன். தற்போது மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.
நாகசைதன்யா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுடன் மலையாள பிரேமம் படத்தில் நடித்த அனுபமா, மடோனா ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும், நேரடி படம் என்கிறபோது எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் இந்த பிரேமம் படத்தைப்பொறுத்தவரை அப்படத்தின் மலையாளப் பதிப்பில் நிவின்பாலியும், சாய் பல்லவியும் சிறப்பாக நடித்திருந்ததால் அதுவே இப்போது தெலுங்கு ரீமேக்கில் நடிப்பவர்கள் பெரிய சவாலாகியிருக்கிறது.

குறிப்பாக, அந்த படத்தில் நாயகியாக நடித்த சாய் பல்லவியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த ஒரே படத்தில் அவர் தென்னிந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார். அதனால் சாய் பல்லவி நடித்த மலர் கேரக்டரில் நடிக்கும் ஸ்ருதிஹாசனுக்கு இன்னும் பெரிய சவாலாக உள்ளதாம். அதனால் அந்த சாயல் துளியும் தன்னிடமிருந்து வெளிப்படாமல் இருக்க, நிறைய ஹோம்ஒர்க் செய்து நடித்து வருகிறாராம் ஸ்ருதிஹாசன். மேலும், சாய் பல்லவியை மிஞ்சும் நடிப்பு உங்களிடமிருந்து வெளிப்படுமா? என்று ஸ்ருதிஹாசனிடம் தெலுங்கு மீடியாக்கள் கேள்விகள் எழுப்பி வரும் நிலையில், படம் திரைக்கு வரும்போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் -என்று மட்டும் பதில் கொடுத்து வருகிறாராம் ஸ்ருதிஹாசன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget