குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் ‛இறுதிச்சுற்று' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்ட இறுதிச்சுற்று
படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு, அவர்களின் மனதிலும் நீங்காத இடம்பிடித்தார் ரித்திகா.
தற்போது ‛காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‛ஆண்டவன் கட்டளை' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் புதிய படமொன்றிலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரித்திகா.
ஷிவராஜ்குமார் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கன்னடப்படம் ‛சிவலிங்கா'. தன்னுடைய இயக்கத்தில் வெளியான அந்த கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கைதான் இயக்குகிறார் பி.வாசு. ‛சந்திரமுகி' படத்தைப் போல் இந்த ‛சிவலிங்கா'வும் ஹாரர் படமாம். தமிழிலும் ‛சிவலிங்கா' என்ற பெயரிலேயே இப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தில் இயக்குனர் வாசுவின் மகனும், நடிகருமான சக்தி வாசு முஸ்லீம் இளைஞன் கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 14 ஆம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்குகிறது.

கருத்துரையிடுக