கோலிவுட்டை கலக்க வரும் மிஸ்.கேரளா

திருவனந்தபுரத்தில் நடந்த மிஸ்.கேரளா குயின் போட்டியில் டைட்டில் வென்றவர் அர்ச்சனா ரவி. 19 வயதான அர்ச்சனா ரவி தற்போது மாடலிங் உலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். இந்த
ஆண்டு நடந்த மிஸ்.பெர்சனாலிடிட்டி போட்டியில் 2வது இடம் பிடித்துள்ளார், தென்னிந்திய அழகி போட்டியில் சிறந்த முகத்தழகி பட்டம் வென்றார். இப்படி அழகால் விருதுகளை குவித்து வரும் அர்ச்சனா ரவியின் அடுத்த திட்டம் சினிமாவில் நடிப்பது. அதுவும் தமிழ் சினிமாவில் நடிப்பது. தமிழ் படம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்குகிறார். முறையான அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது.

இதுபற்றி அர்ச்சனாக ரவி கூறியதாவது: நடிப்பு என்பது ஒரு கலை. அந்த கலையை நான் எங்கும் சென்றும் பயிலவில்லை. நடிப்பு மட்டும் தான் என்னுடைய மிக பெரிய கனவாக இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர் கௌதம் மேனன் தான். காதலை மையமாக கொண்டு அவர் உருவாக்கியுள்ள படங்கள் யாவும் மிக எதார்த்தமாகவும், நெஞ்சை உரசி செல்ல கூடியதாகவும் இருக்கும். தனுஷின் மிகப்பெரிய ரசிகை. அவரின் சில காட்சிகளை பார்த்து தான் நான் என்னுடைய நடிக்கும் திறனை வளர்த்து வருகிறேன். எந்த ஒரு கதாப்பாத்திரமாய் இருந்தாலும் சரி. திரைப்படம் முடிந்து ரசிகர்கள் வீட்டுக்கு சென்றாலும் அந்த கதாப்பாத்திரமானது அவர்களின் நினைவில் இருந்து அழியக் கூடாது. அப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் அர்ச்சனா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget