ஏற்றத்தாழ்வுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சில சமயங்களில் காலநிலை மாறுதல்களாலும் தலைமுடி உதிர்வது என்பது அதிகமாக இருக்கும். இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. இப்போது கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் காண்போம்.
கோடை வெயிலிலும் அழகாக ஜொலிக்க
பெண்கள் பொதுவாக சிவப்பாக தெரியவேண்டும் என்பதற்காக கண்ட கண்ட கிரீம்களை பூசுவது வழக்கம். ஆனால் மிக எளிமையான முறைகளின் மூலமே சிவப்பழகுடன் ஜொலிக்கலாம். முட்டைக்கோஸ் விழுது, பால் தேன் கலந்து முகத்திற்கு பேக் போட்டு 15நிமிடம் கழித்து கழுவவேண்டும்.
பாதாம் எண்ணெயுடன் சுத்தமான சந்தனத்தை குழைத்து முகத்தில் பூச வேண்டும். இந்த கலவை காய்ந்தவுடன் முகத்தை கழுவவேண்டும். தொடர்ந்து சிறிதளவு பாலை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இப்படி 3-4 நாட்கள் செய்தால் முகம் பளிச்சென்று மாறும். முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் பூசி வந்தால் சருமம் சிவப்பாக மாறுவதுடன் மிருதுவாகவும் இருக்கும் வாரத்திற்கு ஒருமுறை சிறிது தேன் சிறிது பாலேடு சிறிது வெள்ளரிச்சாறு கடலை மாவு நான்கையும் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பின் கழுவி வரலாம். மசித்த வாழைப்பழத்துடன் சிறிது தேன் சிறிது பயத்தமாவு குழைத்து முகத்தில் தடவி ஊறவைத்து 15நிமிடம் கழித்து கழுவி வந்தால் நிச்சயம் நிறம் மாறுவதை காணலாம்.
முடி வளர்ச்சியும் அதிகம்
கோடையில் முடி எப்படி அதிகம் உதிருமோ, அதேபோல முடியின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். மற்ற காலங்களை விட கோடையில் உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதற்கு வெப்பமான காலநிலையில் உடலின் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் உடலில் இரத்த ஓட்டமும் அதிகமாக இருக்கும். ஆகவே இக்காலத்தில் முடி வளர்வதற்கு தேவையான பராமரிப்புகளை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
வியர்வை
கோடையில் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் வியர்வை. கோடையில் அதிகம் வியர்ப்பதால் முடியின் கால்கள் வலிமையின்றி இருக்கும். இந்த சமயத்தில் சீப்பு கொண்டு அளவுக்கு அதிகமாக சீவினால், தலைமுடியை வேரோடு கையில் பெறவேண்டியது தான். கோடையில் தினமும் தலைக்கு குளிப்பதனால் தலையில் வியர்வையினால் சேர்ந்த அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும். ஆனால் தினமும் தலைக்கு ஷாம்பு போடாதீர்கள் இல்லாவிட்டால் தலைமுடி அதிகம் உதிர்வதோடு, ஸ்கால்ப்பில் உள்ள இயற்கை எண்ணெய்களும் நீங்கிவிடும். முக்கியமாக கோடையில் சூரியக்கதிர்கள் நேரடியாக தலைமுடியைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு வெளியே செல்லும் போது தலைக்கு ஏதேனும் துணியை சுற்றிக்கொண்டோ அல்லது தொப்பி அணிந்து கொண்டோ, குடைபிடித்துக்கொண்டோ செல்லலாம்.
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.