உடல் எடையை குறைக்க வேண்டுமா

தேவையான பொருட்கள் :

கொள்ளு - அரை கப்
தக்காளி - 3
எலுமிச்சம்பழச்சாறு - அரை டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீ ஸ்பூன்

பொடிக்க :

மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

* கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதல் நாள் இரவே கொள்ளை ஊறவைத்து, மறுநாள் 3 கப் தண்ணீரை சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

* மிளகு, சீரகத்தை நன்கு மைய அரைத்து பூண்டு, கறிவேப்பிலை சேர்த்துத் தட்டியெடுத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேருங்கள். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்த விழுது சேர்த்து இன்னும் 3 நிமிடம் வதக்குங்கள்.

* பின் கொள்ளு வேகவைத்த தண்ணீரையும், தேவையான உப்பையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

* வடிகட்டி எலுமிச்சம்பழச் சாறு, கொத்தமல்லித்தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறுங்கள்.

* சத்தான கொள்ளு சூப் ரெடி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget