பாலிவுட்டில் இருக்கும் நட்சத்திர தம்பதியரில் கரீனா கபூரும், சைப் அலிகானும் முக்கியமானவர்கள். தற்போது கரீனா, கர்ப்பமாக இருக்கிறார். டிசம்பர் மாதம் குழந்தை பிறக்க
உள்ளது. இதனிடையே கரீனா மற்றும் சைப் இருவரும் தங்கள் குழந்தைக்கு இப்போதே பெயர் முடிவு செய்துவிட்டார்களாம். சைப்-கரீனா பெயர்களின் இரண்டையும் சேர்த்து ‛சைபீனா என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கரீனாவிற்கு டிசம்பர் 20ஆம் தேதி குழந்தை பிறக்க இருப்பதை கரீனாவின் தந்தை ரன்தீர் கபூர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இதைப்பற்றி ரன்தீர் கபூர் மேலும் கூறியதாவது.... "கரீனா தனது கற்பகாலத்தை நல்ல முறையில் கடந்து வருகிறார். அவரின் குழந்தையை எங்கள் கையில் வாங்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறோம். அவரும், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். கரீனாவிற்கு அடுத்த மாதம் 20-ம் தேதி குழந்தை பிறக்க இருக்கிறது. தற்போது கரீனாவிற்கு அறுவை சிகிச்சையா இல்லை சுகப்பிரசவமா என்பது தெரியவில்லை. ஆனால் குழந்தையின் நிலையை பார்த்தால் தான் தெரியும். நாங்கள் அனைவரும் எங்கள் குழந்தைக்காக காத்து கொண்டு இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக