2016-ல் டாப் நடிகர்கள்

இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்து முதல் இடத்தை பிடிக்கிறார் விஜய் சேதுபதி. இவர் இந்தாண்டில், காதலும் கடந்து போகும், சேதுபதி,
ஆண்டவன் கட்டளை, இறைவி, தர்மதுரை, றெக்க என 6 படங்களில் நடித்துள்ளார்.
அதேப்போன்று சில படங்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தாலும் எண்ணிக்கையின் அடிப்படையில் பாபி சிம்ஹாவும் 6 படங்களில் நடித்துள்ளார். இவர் பெங்களூர் நாட்கள், கோ 2, மீரா ஜாக்கிரதை, இறைவி, கவலை வேண்டாம். இவற்றில் கோ 2வில் மட்டுமே பாபி சிம்ஹா முழுமையான ஹீரோவாக நடித்துள்ளார்.

தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத்தேவா என நான்கு படத்தில் நடித்துள்ள சசிகுமார் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

விஷாலும் (கதகளி, மருது, கத்திச் சண்டை) ஜி.வி.பிரகாசும் (பென்சில், கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு) தலா 3 படங்களில் நடித்து 3 வது இடம் பிடிக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் (ரஜினி முருகன், ரெமோ), தனுஷ் (தொடரி, கொடி), சிம்பு (இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா) படங்களில் நடித்து 4வது இடம் பிடிக்கிறார்கள்.

ரஜினி (கபாலி), விஜய் (தெறி), சூர்யா (24), கார்த்தி (காஷ்மோரா), விக்ரம் (இருமுகன்) ஆகியோர் தலா ஒரு படத்தில் நடித்துள்ளனர்.

இந்தாண்டு முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், அஜித் நடித்த படம் எதுவும் வெளிவரவில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget