ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சிங்கம்-3' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக புதிய ரிலீஸ்
தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிங்கம்-3' படத்தை முதலில் டிசம்பர் 16-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். குறித்த நேரத்தில் படத்தின் தணிக்கை முடியாத காரணத்தினால் அதன் பிறகு படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள்.
இந்நிலையில் சிங்கம்-3 படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் யு ஏ சான்றிதழ் கொடுத்தனர். படத்தின் தொடக்கம் முதல் க்ளைமாக்ஸ்வரை வன்முறையின் உச்சமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதாம். எனவே யு சான்றிதழ் தர மறுத்துவிட்டது தணிக்கைக்குழு. எனவே ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். ரிவைசிங் கமிட்டியில் உள்ள சினிமா சம்மந்தப்பட்ட நபர் வேண்டுமென்றே நேரம் ஒதுக்காமல் இழுத்தடிக்க, வேறுவழியில்லாமல் சிங்கம்-3 படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் தள்ளி வைத்தார்கள்.
நாட்டில் நிலவி வரும் பணத்தட்டுப்பாடு, ஜெயலலிதா மரணம், வார்தா புயலால் ஏறபட்ட பாதிப்பு போன்ற காரணங்களால் 'சிங்கம்-3' யின் வெளியிட்டை தள்ளிவைத்துவிட்டதாக காரணம் சொன்னார்கள். பொங்கலுக்கு ஏராளமான படங்கள் வெளியாக இருப்பதால் பொங்கல் கழித்து இரண்டுவாரங்களுக்குப் பிறகு 'சிங்கம்-3'யை ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.
சூர்யா நடிப்பில் வெளியான 'ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படம் 2001 ஜனவரியில் வெளியானது. அதன் பிறகு சூர்யா நடித்த படம் எதுவுமே ஜனவரியில் வெளியானதில்லை. 15 ஆண்டுகள் கழித்து சூர்யா நடித்து ஜனவரியில் வெளியாகும் படம் 'சிங்கம்-3' தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக