மியாவ் சினிமா விமர்சனம்

திருச்சியைச் சார்ந்த மறைந்த பிரபல எம்.பி., அடைகலராஜின் வாரிசு வின்சென்ட் அடைகலராஜ், தனது "குளோபல் வுட்ஸ் மூவிஸ்" பேனரில்,
புதியவர் சின்னாஸ் பழனிசாமி இயக்கத்தில், ஒரு ஜெகஜால கில்லாடி பூனை முக்கிய பாத்திரத்தில் நடிக்க, அது கூடவே முற்றிலும் புதுமுகங்கள் பலர் நடிக்க, தயாரித்திருக்கும் திரைப்படம் தான் "மியாவ்".

படித்து விட்டு பெற்றோர் உபயத்தில் ஜாலியாக சுற்றித்திரியும் நான்கு இளைஞர்கள், சுற்றுலா போன இடத்தில் ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணின் உடம்பையும், உயிரையும் தங்களது இச்சைக்கு பலியாக்கிவிட்டு, ஒன்றும் தெரியாத பிள்ளைகள் போல் ஊருக்கு திரும்பி, தங்களது அடுக்குமாடி குடியிருப்பில் ஜாலி கூத்தடிக்கின்றனர். அவர்கள் நால்வரையும் அந்த இளம் பெண்ணின் ஆவி, ஒரு பூனையின் உடம்பிற்குள் புகுந்து கொண்டு கிராபிக்ஸ், சி.ஜி., உதவியுடன் எப்படி, எப்படியெல்லாம் பழி தீர்க்கிறது? என்பது தான் "மியாவ்" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்.

கெளதமாக ராஜா, கார்த்தியாக சஞ்சய் மிக்கி, கிரணாக ஹைடன், ஆகாஷாக குமார், சுஹானாவாக ஊர்மிளா காயத்திரி, குட்டியாக ஷைனி, வாட்ஸ் அப் மணியாக டேனியல், சைக்கோவாக சாய் கோபி, கான்ஸ்டபிளாக டெலிபோன்ராஜ், போலீஸ் எஸ்.ஐ ஆக ஆனந்த்தாகா, க்யூட் பேபியின் தந்தையாக ஸ்டான்லி, பூனை வளர்க்கும் க்யூட் பேபியாக யுவினா, மயிலாக மோகனா உள்ளிட்ட புதுமுகங்களும், பழகிய முகங்களும் பாத்திரமறிந்து பளிச்சிட முயற்சித்திருக்கின்றனர். அதில், கிராமத்து இளம் பெண்ணாக வரும் அந்த அழகி மட்டுமே ஒரளவு வெற்றி பெற்றிருக்கிறார்.

"க்யூட் லிட்டில் பொண்ணு... "பாடலில் இப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் கூட தலையை காட்டி தங்களது கலைதாகத்தை தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரையும் காட்டிலும் கிராபிக்ஸ் மற்றும் சி.ஜி.எபெக்ட்டில் ஷெல்பி எனும் அந்த பூனை ஹாலிவுட் ஸ்டைலில் பொளந்து கட்டியிருக்கிறது.... என்பது ஆறுதல்!

ஆறு சாமியின் கலைநயம் மிக்க கலை இயக்கம், ரமேஷ் ஆச்சார்யாவின் மிரட்டும் சி.ஜி. கிராபிக்ஸ் எபெக்ட்டுகள், சதீஷ் சூர்யாவின் பக்கா படத்தொகுப்பு, போஜன் கே.தினேஷின் அழகிய ஒளிப்பதிவு, ஸ்ரீஜித் இடவனாவின் இசையில்...."கேங் கேங்...", "ஒரு க்யூட் லிட்டில் பொண்ணு...", "டிங்கி பிங்கி பாங்கி... ", "பாவம் இந்த பூணை தான்..." உள்ளிட்ட சுபராக பாடல்கள் மற்றும் பலே பின்னணி இசை., ஆகிய ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும் , ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்... சின்னாஸ் பழனிசாமியின் எழுத்து, இயக்கத்தில்., ஆசை காட்டி மோசம் செய்த ஆண்களை பழிவாங்கும் பெண்ணின் ஆவி... எனும் அதரப் பழசானகதை தான் "மியாவ்" படத்தின் அடிநாத கதை என்பது பெரும் பலவீனம்!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget