பாலியல் தொல்லை பரபரப்பில் தினா தத்தா

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் இரண்டாவது ஹீரோயினாகவும், குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து வருகிறவர் தினா தத்தா. சமீபத்தில் வித்யா
பாலன் நடித்த பிரனீதா, ஐஸ்வர்யராய் நடித்த ஜோக்கர் பாலி படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தினா நேற்று முன்தினம் மும்பையில் இருந்து இருந்து கல்கத்தாவிற்கு விமானத்தில் சென்றிருக்கிறார். அப்போது பின் சீட்டில் இருந்த ராஜேஷ் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து தினா கூறியிருப்பதாவது:
விமான பயணம் கூட பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. நான் அமர்ந்திருந்த சீட்டுக்கு பின்புறம் அமர்ந்திருந்தவர் முன்பக்கம் கையை நீட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தார். ஆரம்பதில் நான் தெரியாமல் கைபட்டுவிட்டதாக நினைத்து திரும்பி பார்த்து அவரை முறைத்தேன். அவர் சாரி கேட்டார். ஆனால் அதன்பிறகும் தொடர்ந்து அவ்வாறே செய்தார். இதுகுறித்து பணிப்பெண்களிடம் புகார் செய்தேன். தவறுதலாக கை படுவது சகஜம்தான். வேண்டுமானால் சீட் மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள் என்றனர்.

நான் அந்த நபரை விமானத்தை விட்டு இறக்குங்கள் என்றேன். அதற்கு விமான பணிப்பெண்கள். நீங்கள் முறைப்படி புகார் அளித்தால்தான் அப்படிச் செய்ய முடியும் என்றார்கள். நானும் புகார் கொடுத்துவிட்டு வந்தேன். எனக்கு இந்த பிரச்சினை நடந்தபோது ஒரே ஒரு குடும்பத்தை தவிர வேறு யாரும் அதனை தடடிக் கேட்கவில்லை. விமான பணிப்பெண்கள் கூட எனக்கு உதவில்லை. என்றார். தினாவின் புகார் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget