டெஸ்ட் அரங்கில் இந்திய அணி உச்சத்தை தொட்டிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கேப்டன் கோஹ்லி, அஷ்வின், ஜடேஜா
உள்ளிட்ட நமது வீரர்களின் செயல்பாட்டிற்கு மதிப்பெண்களை வாரி வழங்கலாம். ஐந்து போட்டிகளிலும் முத்திரை பதித்தனர். தொடரை 4–0 என வென்று, வரலாறு படைத்தனர்.
சொல்லி அடித்த கோஹ்லி 9.5/10
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல, கேப்டன் கோஹ்லியின் துணிச்சலான அணுகுமுறை முக்கிய காரணம். சரியான நேரத்தில் ‘டிக்ளேர்’ செய்வது, சிறந்த ‘லெவன்’ அணியை தேர்வு செய்வது என கண்ணும் கருத்துமாக செயல்பட்டார். மும்பை டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இவர், அதிக ரன் (5 போட்டி, 655) குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். தொடர்ந்து அதிக (18) டெஸ்டில் தோற்காமல் இருந்த கேப்டன் கவாஸ்கர் சாதனையையும் சமன் செய்தார்.
சபாஷ்...அஷ்வின் 9/10
இந்திய துணைக்கண்டத்தில் ‘சுழல்’தான் வெற்றியை தீர்மானிக்கும். இதில் தமிழகத்தின் அஷ்வின்தான் ‘கிங்’. விசாகப்பட்டன டெஸ்டில் 8, மும்பையில் 12 விக்கெட் வீழ்த்தி மிரட்டினார். இத்தொடரில் அதிக விக்கெட் (5 போட்டி, 28 விக்.,) வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். பேட்டிங்கிலும் (4 அரைசதம் சேர்த்து 306 ரன்) அசத்தி ‘ஆல்–ரவுண்டர்’ என்பதை உறுதி செய்தார்.
‘ஜட்டு’ தந்த லட்டு 8.5
இடது கை ‘சுழல்’ வீரரான ரவிந்திர ஜடேஜா(செல்லமாக ஜட்டு) தனது பணியை கச்சிதமாக செய்தார். சென்னை டெஸ்டில் மிரட்டிய இவர், இந்திய அணிக்கு நம்ப முடியாத வெற்றியை பெற்று தந்தார். இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்தி ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் (5 போட்டி, 26 விக்.,) இரண்டாவது இடம் பிடித்தார்.
‘பூஜைக்கு’ வந்த புஜாரா 8.5/10
டெஸ்ட் தொடர் வெற்றி பூஜையில் புஜாராவுக்கு முக்கிய பங்கு உண்டு. முன்னாள் வீரர் டிராவிட் மாதிரி நிலைத்து நின்று விளையாடிய இவர், ராஜ்கோட், விசாகப்பட்டன டெஸ்டில் சதம் அடித்தார். 5 டெஸ்டில் 2 சதம் உட்பட 401 ரன்கள் குவித்தார்.
கருணை காட்டாத கருண் 8/10
அறிமுக தொடரின் முதல் இன்னிங்சில் 4 ரன் அவுட்டான கருண் நாயர், மிக விரைவாக மீண்டார். சென்னை டெஸ்டில் விஸ்வரூபம் எடுத்தார். இங்கிலாந்து பவுலர்களுக்கு கொஞ்சம் கூட கருணை காட்டாத இவர், ரன் மழை பொழிந்தார். முச்சதம் (303*) குவித்து புதிய நாயகனாக’ உருவெடுத்தார். சேவக்கிற்குப்பின் முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரரானார்.
ஜெய்...விஜய் 8/10
தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் சிறந்த துவக்கம் தந்தார். முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்தார். பின் மும்பை டெஸ்டிலும் சதம் கடந்து அசத்தினார். 5 போட்டியில் விளையாடி இரண்டு சதம் உட்பட 357 ரன் குவித்தார்.
ரம்மியமான ராகுல் 7.5/10
துவக்க வீரர் லோகேஷ் ராகுல் காயம் காரணமாக 3 டெஸ்டில் மட்டுமே விளையாடினார். ஆரம்பத்தில் ஜொலிக்காத இவர், சென்னையில் ரம்மியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 199 ரன்கள் குவித்து இரட்டை சத வாய்ப்பை ஒரு ரன்னில் தவறவிட்டார். நுணுக்கமான ஆட்டத்தில் கைதேர்ந்த இவர், எதிர்கால நட்சத்திரமாக பிரகாசித்தார்.
ஜெயித்த ஜெயந்த் 7/10
அறிமுக தொடரிலேயே அசத்தினார் ஜெயந்த் யாதவ். விசாகப்பட்டன டெஸ்டில் 4 விக்கெட் வீழ்த்திய இவர், மும்பை டெஸ்டில் சதம் அடித்தார். 3 போட்டியில் 221 ரன், 9 விக்கெட் கைப்பற்றினார்.
முத்திரை பதித்த பார்த்திவ் 6.5/10
எட்டு ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல்(3 போட்டியில் 11 கேட்ச், 2 ஸ்டம்பிங், 195 ரன்) தனி முத்திரை பதித்தார்.
‘ஸ்டம்ப்’ உடைத்த ஷமி 6/10
விசாகப்பட்டன டெஸ்டில் ஷமி ‘வேகத்தில்’ இங்கிலாந்து கேப்டன் குக் போல்டானார். அப்போது ‘ஆப் ஸ்டம்ப்’ இரண்டாக உடைந்ததை எப்போதும் மறக்க முடியாது. ஷமி, 3 போட்டியில் 10 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ் யாதவ்(5 போட்டி, 8 விக்கெட்), இஷாந்த் சர்மா(1 போட்டி, 3 விக்கெட்) ஓரளவுக்கு கைகொடுத்தனர்.
காம்பிர்(1 போட்டி, 29 ரன்), ரகானே(3 போட்டி, 63 ரன்), விரிதிமன் சகா (2 போட்டி 49 ரன், 6 கேட்ச் ) ஆகியோருக்கு இத்தொடர் ஏற்றம் தரவில்லை.

கருத்துரையிடுக