விண்டோஸ் டிபண்டர் இயக்கத்தை முடக்குவது எப்படி

மைக்ரோசாப்ட் தன் இயக்க முறைமையுடன் தரும் விண்டோஸ் டிபண்டர் என்னும் செயலி, அறிமுகமானது முதல் இன்று வரை எப்படி
செயல்படுகிறது என்ற கட்டுரை தரப்பட்டது. எப்படி விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 இயக்க முறைமைகளில், இந்த செயலி, இயக்க முறையிலேயே இணைந்ததாகத் தரப்பட்டு இயக்கப்படுகிறது என்பதுவும் விளக்கப்பட்டது. இதனைப் படித்த பல வாசகர்கள், தாங்கள் எப்போதும் போல, தர்ட் பார்ட்டி எனப்படும் பிற நிறுவனங்கள் தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மட்டுமே பயன்படுத்த விரும்புகிறோம் என்று எழுதி உள்ளனர். அவர்களைப் பொறுத்த வரை, எதற்காக ஒரே செயல்பாட்டிற்காக, மால்வேர் மற்றும் வைரஸ் தொகுப்புகளைத் தடுப்பதற்காக, இரண்டு செயலிகளை இயக்கி, கம்ப்யூட்டர் திறனை வீணாக்க வேண்டும் என்ற விவாதத்தை முன் வைக்கின்றனர்.

வாசகர்களில் சிலர், விண்டோஸ் 8 மற்றும் 10 இயக்க முறைமைகளில் இது இயக்கக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருப்பதால், இதன் செயல்பாட்டினை முடக்கி வைக்க இயலவில்லை. அதற்கு ஏதேனும் வழிகள் உள்ளனவா என்று கேட்டுள்ளனர்.

ஆம், உண்மைதான். விண்டோஸ் 8 மற்றும் 10 இயக்கம் உள்ள கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் டிபண்டர் செயலியின் செயல்பாட்டினை முற்றிலுமாக முடக்கி வைக்க முடியாது. இவற்றின் செயல்பாட்டினைத் தற்காலிகமாக மட்டுமே முடக்க முடியும். மீண்டும் அது தானாகவே இயங்கத் தொடங்கி, பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு, மால்வேர் மற்றும் வைரஸ்களைத் தடுப்பதில் இயங்கும்.

இதனை முடக்கி வைக்க, இந்த இயக்க முறைமைகளில் வழி இல்லை என்றாலும், இதற்கென செயலி ஒன்றை நிறுவனம் ஒன்று தருகிறது. இலவசமாகவேத் தரவிறக்கம் செய்திடக் கூடிய இந்த செயலியின் பெயர் Defender Control. இதனை http://www.sordum.org/downloads/?st-defender-control என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ப்ளாஷ் ட்ரைவ்களிலும் எடுத்துச் சென்று, பிற கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம், விண்டோஸ் விஸ்டா (32 மற்றும் 64 பிட்), விண்டோஸ் 7, விண்டோஸ் 8, 8.1 மற்றும் விண்டோஸ் 10 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்கும் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம்.

இதைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
கம்ப்யூட்டரிலிருந்து யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் அல்லது எதிர்த் திசையில், அதிக டேட்டா உள்ள பைல் ஒன்றை மாற்றும்போது, விண்டோஸ் டிபண்டர் செயலியை முடக்கி வைத்தால், காப்பி செய்யப்படும் நேரம் குறையும்.
நாம் பதிந்து வைத்துள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் விண்டோஸ் டிபண்டர் ஆகியவற்றிற்கிடையே செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்படாது.
சில தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நாம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்கையில், அவை, விண்டோஸ் டிபண்டர் செயல்பாட்டினை நிறுத்தி வைக்குமாறு நம்மைக் கேட்டுக் கொண்டு, நிறுத்தி வைத்த பின்னரே, பதியத் தொடங்கும். அது போன்ற வேளைகளில், இந்த புரோகிராம் மூலம், விண்டோஸ் டிபண்டர் செயல்பாட்டை நிறுத்தி வைக்கலாம்.

நாம் விண்டோஸ் டிபண்டர் செயலியை முடக்காமல், செயல்படும் நிலையில் வைத்தால், நாம் பெர்சனல் கம்ப்யூட்டரை ஒவ்வொரு முறை இயக்கும் போதும் விண்டோஸ் டிபண்டர் தன் செயல்பாட்டினைத் தொடங்கும். கம்ப்யூட்டர் திறமையாகச் செயல்படத் தேவையான ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் திறன் குறைவாக இருந்தால், விண்டோஸ் டிபண்டர் இயக்கத்தினை நிறுத்தி வைப்பதே நல்லது. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இயங்குவதால், வைரஸ் மற்றும் மால்வேர் பிரச்னைகள் ஏற்படாது.
எனவே, மேலே சொல்லப்பட்ட புரோகிராமினை இன்ஸ்டால் செய்து, விண்டோஸ் டிபண்டரை நிலையாகவோ அல்லது தற்காலிகமாகவோ நிறுத்தி வைப்பது நல்லது.

விண்டோஸ் டிபண்டர் குறித்து மேலும் சில புதிய தகவல்களை இங்கு காணலாம். விண்டோஸ் டிபண்டரில், விண்டோஸ் 8 இயக்க முறைமையிலேயே, Cloud protection என்னும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. விண்டோஸ் 10ல், அது இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வளையம், மால்வேர் அல்லது வைரஸ் முதல் முறையாகத் தென்பட்டாலும், அதனை நிறுத்திவிடுகிறது. அவை, உங்கள் கம்ப்யூட்டருக்குள் நுழையவே முடியாது. மேலும், அந்த மால்வேர் குறித்த தகவல் உடனடியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளத்திற்குச் செல்கிறது. உடனடியாக, அந்த வைரஸ் அல்லது மால்வேர் நுழையாமல் இருக்கும் வழிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், மைக்ரோசாப்ட் வழிகளை அனுப்புகிறது. இந்த செயல்பாட்டினை Settings -> Update and Security -> Windows Defender -> Cloud Protection எனச் சென்று, இயக்கலாம் மற்றும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இயக்கி வைப்பதே நல்லது.

விண்டோஸ் 10ல், விண்டோஸ் டிபண்டர் செயலியில் tamper protection என்னும் புதுவகை பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் மால்வேர், ரெஜிஸ்ட்ரி அல்லது அப்ளிகேஷன் செட்டிங்ஸ் அமைப்பில் ஏதேனும் மாற்றங்களைச் செய்திட முயற்சித்தால், அதனை விண்டோஸ் டிபண்டர் உடனடியாகத் தடுக்கும். மேலும், தரவிறக்கம் செய்யப்பட்ட பைல்கள், மெயில்கள், தாமாகவே மால்வேர் சோதனைகளுக்கு உட்பட வைக்கப்படுகின்றன. இதற்கென தனியே எந்தவிதமான அமைப்பும் அமைக்கப்பட வேண்டியதில்லை.

விண்டோஸ் இயக்க முறைமையில் பிரச்னை ஏற்பட்டு, அது ரெகவர் ஆகும் நிலை ஏற்பட்டால், அந்த செயல்பாட்டில், மால்வேர் புரோகிராம்கள் தென்பட்டால், அவை நீக்கப்பட்டு கம்ப்யூட்டர் சுத்தம் செய்யப்படும்.
விண்டோஸ் 10 இயக்க முறைமையில், Secure Event Tracing for Windows என்னும் புதிய பாதுகாப்பு டூல் ஒன்று தரப்பட்டுள்ளது. விண்டோஸ் டிபண்டர் போன்ற பாதுகாப்பு செயலிகள் இயங்குகையில், இந்த டூலையும் அவை எடுத்துக் கொண்டு இயங்கலாம். அதாவது, அதன் இயக்கத்துடன், இந்த சோதனையும் இணைக்கப்பட்டு, கம்ப்யூட்டர் காப்பாற்றப்படும்.

விண்டோஸ் 10ல், விண்டோஸ் டிபண்டர் செயலியில், புதிய பல அம்சங்கள் இணைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன. அவை, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழிகள், கண்டுபிடிக்கப்பட்ட மால்வேர்கள் குறித்து புதிய வழிகளில் அறிக்கை அனுப்புதல் மற்றும் மால்வேர் கண்டறியும் புதிய வழிகள் ஆகும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget