இறுக்கமான உள்ளாடை அணிபவர்கள் கவனிக்க வேண்டியவை

பெண்கள் ஃபிட்டாக அணிகிறோம் என்ற பெயரில் நிறைய பேர் இறுக்கமாக தான் உள்ளாடை அணிகிறார்கள். இதனால் பிறப்புறுப்பு பகுதியில் நிறைய பேருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு.
இதனால், நாள் கணக்காக சொறிந்துக் கொண்டே இருப்பார்களே தவிர அதற்கான தீர்வு என்ன? எதனால் இப்படி ஏற்பட்டது என்று யாரும் கவனிப்பது இல்லை.

பெண்களுக்கு விந்தணு எண்ணிக்கை, இரத்த ஓட்டம், நெஞ்செரிச்சல், அலர்ஜிகள் என இறுக்கமாக உள்ளாடை அணிவதால் நிறைய உடல்நல அபாயங்கள் ஏற்படுகின்றன. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் சீரான இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் அவ்விடத்தில் இருக்கும் நரம்புகள் உணர்ச்சியற்று போக வாய்ப்புகள் இருக்கின்றன. சீரான இரத்த ஓட்டம் தடைப்படும் போது அவ்விடத்தில் இருக்கும் திசுக்கள் இறந்து போக கூடும். எரிச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படவும் இறுக்கமான முறையில் உள்ளாடை அணிவது ஓர் காரணமாக அமைகிறது.

தினமும் இவ்வாறு நீங்கள் அணிவதால் உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இறுக்கமான முறையில் உள்ளாடை அணிய வேண்டாம். சிலர் உள்ளாடையை வயிறு வரை ஏற்றி இறுக்கமாக அணிவார்கள். இது வயிறு பகுதியை மிகவும் கடினமாக உணர செய்யும். இதனால் ஏற்படும் அமில எதிர்வினையின் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவ்விடதிற்கும் காற்றோட்டம் தேவை. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் காற்றோட்டம் தடைப்படுகிறது.

இதனால் வியர்வை அதிகம் வெளிப்பட்டு அவ்விடத்திலேயே தங்கி பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயமும் உண்டு. மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பெண்களுக்கு சிறுநீர் குழாய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். இதற்கு காரணம் பெண்ணுறுப்பில் காற்று புகாத வண்ணம் உள்ளாடை அணிவதே ஆகும். இது மெல்ல மெல்ல ஈஸ்ட் தொற்று ஏற்பட காரணமாக அமைகிறது.

சில குறிப்பிட்ட துணி ரகங்களில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதால் சரும நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக நெய்லான் போன்றவை ஆகும். சிவந்த தடுப்புகள், சருமம் பழுத்து காணப்படுதல் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget