வாலெட்கள் பயன்­பாட்டில் ஏற்படும் பிரச்­­னை என்ன

மொபைல் வாலெட்கள் பயன்­பாடு அதி­க­ரிக்கும் நிலையில், அவற்றை கையாளும் போது ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்­னைகள் எவை என்றும், அவற்­றுக்கு
தீர்வு காண, முறை­யீடு செய்யும் வழி­மு­றை­களை அறிந்­தி­ருப்­பதும் அவ­சி­ய­மா­கி­றது.

பண­ம­திப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு பின் டிஜிட்டல் பரி­வர்த்­தனை தொடர்­பான விழிப்­பு­ணர்வும், பயன்­பாடும் அதி­க­ரித்­து இ­ருக்­கி­றது. ஸ்மார்ட்போன் மூலம் பணம் செலுத்த உதவும் மொபைல் வாலெட்­களின் பயன்­பாடும் கணி­ச­மாக உயர்ந்­துள்­ளது. வாலெட் நிறு­வ­னங்கள் மக்­களின் கவ­னத்தை டிஜிட்டல் பரி­வர்த்­தனை நோக்கி ஈர்க்க, பல மடங்கு வேகத்­துடன் செயல்­பட்டு வரு­கின்­றன. வங்­கி­களும் வாலெட் உள்­ளிட்ட, டிஜிட்டல் பரி­வர்த்­த­னை­களை பெரிய அளவில் முன்­னி­றுத்தி வரு­கின்­றன. டிஜிட்டல் பரி­வர்த்­தனை பயன்­பாடு அதி­க­ரிக்கும் நிலையில், இந்த சேவைகள் தொடர்­பான சிக்­கல்கள் மற்றும் பிரச்­னை­களை வாடிக்­கை­யா­ளர்கள் எதிர்­கொள்ளும் நிலை உரு­வா­கலாம்.
வங்­கிச்­ சே­வையில் ஏதேனும் பிரச்­­னைகள், குறை­களை எதிர்­கொள்ளும் போது, அவற்­றுக்கு தீர்வு காண வாடிக்­கை­யாளர்­களுக்கு பல்­வேறு வச­திகள் உள்­ளன. வங்­கிக்கு தொலை­பேசி மூலம் அல்­லது இ – மெ­யிலில் புகார் தெரி­வித்து நட­வ­டிக்கை எடுக்க கோரலாம். கிளைக்கு நேரா­கச் ­சென்று மேலா­ள­ரிடம் முறை­யி­டலாம். இத்­த­னைக்கு பிறகும் தீர்வு கிடைக்­கா­விட்டால், ஓம்­பட்ஸ்மன் எனப்­படும், வங்கி நடு­நி­லை­யா­ளரை அணு­கலாம். இல்லை என்றால், நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுக்­கலாம்.
வாலெட் அனு­பவம்இதே போல, டிஜிட்டல் வாலெட்­களை பயன்­ப­டுத்தும் போது, சேவை தொடர்­பான பிரச்­னை­களை எதிர்­கொள்ளும் போது வாடிக்­கை­யாளர் என்ன செய்ய வேண்டும்? எனும் கேள்வி எழு­கி­றது. இது வாடிக்­கை­யா­ளர்கள் மற்றும் சேவை நிறு­வனங்கள் என, இரு­த­ரப்­பி­ன­ருக்­குமே புதிய சூழ­லாகும். முதலில் வாலெட் பயன்­பாட்டில் என்ன எல்லாம் சிக்­கல்கள் வர வாய்ப்­புள்­ளன என்­பதை அறிந்து கொள்ள வேண்டும். வாலெட்கள் இடை­யி­லான பரி­வர்த்­தனை முற்­று­பெ­றாமல் தோல்­வியில் முடிய வாய்ப்­பி­ருப்­ப­தாக துறை சார்ந்த வல்லுனர்கள் கூறு­கின்­றனர். பொது­வாக பரி­வர்த்­தனை தோல்வி அடையும் போது, பணம் உடனே செலுத்­தி­யவர் கணக்­கிற்கு திரும்­பி­விடும். வாலெட்டில் இருந்து வங்கி கணக்­கிற்கு செலுத்­தப்­படும் போது, இவ்­வாறு நிகழாமல் தாம­த­மா­கலாம்.
வங்கி சர்வர் போன்­றவை வேகம் குறைந்­தி­ருக்கும் போது இவ்­வாறு நிக­ழலாம். இதே போலவே பணத்­திற்­கான கோரிக்கை சமர்­ப்பித்த உடன், இடை­ப்பட்ட என்.பி.சி.ஐ., அமைப்பின் ஸ்விட்சில் தாமதம் ஏற்­பட்­டாலும் வங்­கி­யிடம் இருந்து உறு­திப்­ப­டுத்தும் தகவல் வராமல் போகலாம். நெட் பேங்கிங் மூலம் வாலெட்­களில் இருந்து கோரிக்கை அனுப்பி வைக்­கப்­படும் போதும், ஏதேனும் சிக்கல் உண்­டா­கலாம். வாலெட்கள் இத்­த­கைய கோரிக்­கை­களை கையாள, 24 மணி நேரம் எடுத்­துக் ­கொள்­கின்­றன. அதன் பிறகு பிரச்னை இருந்தால் வங்­கியை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய முயற்­சிக்கும். சர்வர் வேகம் குறை­வது அல்­லது இணைய இணைப்பு பிரச்னை கார­ண­மாக சேர வேண்­டிய தொகை இடையே காணாமல் போன­தாக தோன்­றலாம். இப்படி தோன்­றி­னாலும், உண்­மையில் அந்த தொகை கணக்கில் இருப்­பதை பின்னர் உண­ரலாம் என, வல்­லு­னர்கள் விளக்கம் அளிக்­கின்­றனர்.
முறை­யீடு செய்­வது எப்­படி?ஆக வாலெட் பயன்­பாட்டில் வாடிக்­கை­யா­ளர்கள் சேவை தொடர்­பான குறை­களை சந்­திக்க நேரலாம். சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னத்­திற்கு இமெயில் மூலம் புகார் தெரி­வித்து நிவா­ரணம் கோரலாம் என்­றாலும், வாலெட் சேவைக்கு என்று நடு­நி­லை­யாளர் இல்­லாத போது என்ன செய்­வது? குறை­க­ளுக்கு நிவா­ரணம் காணும் வழி­முறை வாலெட் நிறு­வ­னங்­களி­டையே மாறு­ப­டலாம். ஆனால் பொது­வாக வாலெட் நிறு­வனங்­க­ளுக்கு பங்­குதாரர் வங்­கிகள் இருக்கும். அந்த வங்­கிகள் பின்­பற்றும் வாடிக்­கை­யாளர் சேவை தொடர்­பான நெறி­மு­றை­களை அவையும் பின்­பற்­றலாம். வாலெட் நிறு­வ­னங்­களின் கால்­சென்­டர்­க­ளையும் தொடர்பு கொள்­ளலாம். வாலெட் செய­லி­கள் மூலம் கூட புகார்­களை தெரி­விக்கும் வசதி இருக்­கி­றது. இதற்­கான தொலை­பேசி எண்­களும் கூட இருக்­கின்­றன. இமெயில் அல்­லது நிறு­வ­னத்தின் சமூக ஊடக பக்­கங்கள் மூலமும் புகார் தெரி­விக்­கலாம் என்­கின்­றனர். எனினும் வாடிக்­கை­யாளர் சேவையில் வாலெட் நிறு­வ­னங்கள் இன்னும் முனைப்பு காட்ட வேண்டும் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget