நயன்தாரா தொடங்கி லட்சுமி மேனன் வரை மல்லுவுட் நடிகைகள் கோலிவுட்டை ஆக்கிரமித்திருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தற்போது வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் ‘தெரியும்
ஆனா தெரியாது’ படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி ஆகிறார் மற்றொரு மல்லுவுட் நடிகை தியா நாயர். படம் பற்றி இயக்குனர் யாழ் குணசேகரன் கூறும்போது. ‘மூலிகை இலையில் தயாரான மதுவை சாப்பிட்டு மோதலில் ஈடுபடும் நண்பர்களுக்குள் ஒருவர் கொல்லப்படுகிறார்.
அவரது உடலை அங்கேயே விட்டுவிட்டு மலையிலிருந்து நண்பர்கள் கீழ் இறங்குகின்றனர். இறந்ததாக எண்ணிய நண்பரின் செல்போனிலிருந்து திடீர் அழைப்பு வருகிறது. இதையடுத்து அவனை தேடிச் செல்கின்றனர். அங்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதை திகிலாக சொல்கிறது ஸ்கிரிப்ட்.
முன்தினம் பார்த்தேன் படத்தில் நடித்த சஞ்சய் ஹீரோ. தியா நாயர் ஹீரோயின். மனோஜ் பத்ரா, வேதா. செல்வம் ஒளிப்பதிவு. அம்ரிஷ் இசை. என்.எல்ஜி.சிபி பின்னணி இசை. கே.என்.ராஜேஷ் தயாரிப்பு. மூணாறு, காந்தலூர்., அதிரப்பள்ளி காடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார்.

கருத்துரையிடுக