மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானபோது குடும்ப குத்து விளக்காகத்தான் வந்தார் நயன்தாரா. ஆனால்
பில்லா படத்தில் பிகினி நடிகையாக உருவெடுத்து தமிழ்நாட்டின் அரும்பு மீசைகளின் அபிமானத்திற்குரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். அப்போது சூடு பிடித்த நயன்தாராவின் மார்க்கெட் இப்போதுவரை அதே வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அதோடு, முன்பு கதாநாயகர்களை நம்பி நடித்து வந்தவர் இப்போது கதையின் நாயகியாகி தனது தனித்திறமையை முன்வைத்து முன்னேறிக்கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், அனாமிகா, மாயா படங்களில் கதையின் நாயகியாக நடித்த அவர், விஜயசேதுபதியுடன் நடித்த நானும் ரெளடிதான் படத்தில் காது கேட்காத பெண்ணாக நடித்திருந்தார். அதையடுத்து, டோரா படத்தில் ஹாரர் கதையில் நடித்துள்ள நயன்தாரா, சக்ரி டோல்டி இயக்கத்தில் நடிக்கும் கொலையுதிர்காலம் படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கிறார். மேலும், நானும் ரெளடிதான் காமெடி கலந்த கதையில் உருவான நிலையில், இந்த படம் சீரியஸ் கதையில் உருவாகிறது.

கருத்துரையிடுக