வாகா படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள படம் வீரசிவாஜி. அஜீத்தின் மைத்துணியும், ஷாலினியின் தங்கையுமான ஷாம்லி
ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தவர். வெளிநாடுகளில் நடனம், நடிப்பு கற்றுத் திரும்பி இப்போது ஹீரோயின் ஆகியிருக்கிறார். ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்துள்ளார். ஜான் விஜய் ரோபோ சங்கர், யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மனீஷாஸ்ரீ, வினோதினி நடித்துள்ளனர்.
கணேஷ் விநாயக் இயக்கி உள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இமான் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 16ந் தேதி வெளிவருகிறது. நல்ல சினிமா பின்னணி இருந்தும் கொஞ்சம் தாமதமாக ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்திருக்கிறார் ஷாம்லி. தொடர்ந்த பல வாய்ப்புகள் வந்தபோதும் வீரசிவாஜியின் ரிசல்ட்டுக்கு பிறகு அடுத்த படம் பற்றி யோசிக்கலாம் என்று எதிலும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார். வீரசிவாஜி ஷாம்லிக்கு நல்ல பாதையை போட்டுக் கொடுப்பாரா என்பது பட ரிலீசுக்க பிறகு தெரியும்.

கருத்துரையிடுக