மாணவர்களின் கல்வி தடைபடுவது ஏன்

மாணவர்கள் கல்வி கற்பதற்கு பல காரணிகள் தடையாக அமைகின்றன. இது தொடர்பாக கு.யசிதரன் அவர்களால் எழுதப்பட்ட 'கிராமக் கல்வி மூலம் சமூக மேம்பாடு சாத்தியமா?' எனும்
கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை எடுத்துக் கொண்டால், அதில் கிராமத் தொழிலாளியின் வாழ்வில் பல தரப்பட்ட நலச்சிக்கல்கள் காணப்படும், இது கற்க முடியாத நிலையைத் தோற்றுவிக்கும், கிராமங்களில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, சூழல், அச்சமூட்டும் மனவெழுச்சி, நோய்கள் என்பனவற்றால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, கல்வி பெறமுடியாத நிலை உருவாகிறது.

மேலும் கிராமப் பாடசாலைகளில் மலசலகூட வசதியின்மை, குடிநீர் வசதியின்மை போன்றவை இலங்கையில் நிலவும் முக்கியமான பிரச்னையாகும், கிராமங்களில் உள்ள மக்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற சத்துள்ள உணவுகள் எவை எனத் தெரிந்தும், சத்துள்ள உணவுகளான பழங்கள், பால், முட்டை என்பனவற்றைப் பணம் பெறும் நோக்கத்திற்காக விற்று தம்முடைய வசதிக்கேற்றவாறு பாண், பணிஸ், உரொட்டி, போன்ற சாதாரண உணவுகளை வாங்கி உண்கின்றனர் போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு, இவை பிள்ளைகள் கல்வி பெறுவதற்கு தடையாக அமைகின்ற காரணிகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

வீட்டில் சிறுவர்களுக்கு எழும் பிரச்னைகள் தொடர்பில் ஒரு அறிஞர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அவரின் ஆய்வு முடிவானது அதிக சிக்கல்கள், பழக்கவழக்கங்கள், நடத்தைகள், ஒழுக்கங்கள் ஆகியவற்றில் எழும் பிரச்னைகள் இளையோரின் பழக்கவழக்கங்களை பாதிக்கின்றன என்ற வகையில் அமைந்திருந்தது. பெற்றோர் பிள்ளைகளைக் கடுமையாக நடத்துதல், குற்றம் கூறுதல், அவசரப்படுத்தல் என்பன பிள்ளைகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதால் அவர்கள் கல்வியில் வெறுப்பை அடைகின்றனர். அத்துடன் திரைப்படம் பார்த்தல், போட்டிகளில் பங்குபெறல், அரட்டை அடித்தல், ஒலிநாடா கேட்டல், கோயில் நிகழ்ச்சிகளில் பங்குபெறல், விளையாட்டுகளில் பங்குபெறல் என்பவற்றில் அதிக ஆர்வம் காட்டுதலும் பிள்ளைகளின் கல்வி தடைபடக் காரணங்களாகும்.

பெற்றோரின் தவறான வாக்குறுதிகள், அதாவது 'குறிப்பிட்ட வயதை அடைந்ததும் நீ பாடசாலைக்கு செல்ல வேண்டியதில்லை' போன்றவாறான வாக்குறுதிகள், பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றுதல், வீட்டை விட்டு ஓடுதல், சிறு சிறு திருட்டுகளில் கல்வி தடைபடுவதற்கு காரணங்களாக அமைகின்றன.

ஞா.தில்லைநாதன் அவர்களால் எழுதப்பட 'கல்வியும் மேம்பாட்டிற்கான சமூக மயப்படுத்தல்' எனும் தலைப்பிலமைந்த கட்டுரையில் மாணவர்கள் கல்வியில் சமூகமயப்பட முடியாமைக்கு உடல், உள, குடும்ப, சமூக பாதிப்புகளே காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது.

மனமுறிவு, முரண்பாடு, அச்சுறுத்தல், தகைப்பு, பதகளிப்பு என்பன கல்வி தடைபடுவதற்குப் பிரதானமானவை என்று கூறப்பட்டுள்ளது. மாற்றங்களை அடிக்கடி உள்வாங்க வேண்டிய சமூக கலாசார அசைவியக்கங்களைக் கொண்ட சூழலில் வாழும் பிள்ளைகளால் அம்மாற்றங்களுக்கு சமூகப் பொருளாதார அரசியல் மாற்றத்தாலும் யுத்தம் மற்றும் இயற்கை அர்த்தம் போன்றவற்றாலும் பிள்ளைகள் பெற்றோரைப் பிரிந்து இருத்தல், ஆண்களும் பெண்களும் தமது வேலைப்பளு அதிகரிப்பால் வீடுகளில் முரண்படும் போது பிள்ளைகளுக்கு அடக்குமுறை அதிகமாகி நிம்மதி குறைவு ஏற்படல், தனிப்பட்ட குடும்ப பிரச்னைகள் மற்றும் பாடசாலைசார் பிரச்னைகள் காரணமாக இடைவிலகல், வகுப்பு மட்டச் செயற்பாடுகளில் பொருத்தப்பாடின்மை, மதரீதியான பிற்போக்கான தன்மையும், வாழ்க்கை முறைகளும் காணப்படல், மது பாவனை மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாதல், சிறுவர் துஷ்பிரயோகங்கள், குடும்பங்கள் வறியனவாக இருத்தல், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட குடும்பங்களில் பிள்ளைகள் வாழுதல், கல்விக்குத் தேவையான உதவிகள் போதுமானதாக இல்லாமை, எதிர்பாராமல் நிகழும் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரின் இழப்பு, உடல்ரீதியான நோய்கள், ஊடகங்கள் ரீதியான பொருத்தமற்றது.

நகர்புற பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது கிராமியப் பாடசாலைகளில் மனித பவுதிக வளங்கள் குறைவாகவும் சரிவர பகிரப்படாமலும் உள்ளமை, குறைந்த வருமானமட்டத்தை உடைய பெற்றோர் தமது பிள்ளைகளை வேலைக்கு அனுப்புதல், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வரும்போது புதிய புதிய கலைத்திட்டங்களை முன் வைப்பதால் மாணவர்கள் கற்றல் தொடர்பாக தெளிவற்ற நிலையை அடைதல், இது வரை காலமும் இடம்பெற்று வந்த இனக்கலவரங்கள், போன்றன கல்வி தடைபடுவதற்கான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இந்நூல்களில் உள்ள கருத்துக்களை தொகுத்து நோக்கினால், இவை மாணவர்களுடைய கல்வி கற்கும் வேகம் குறைவடைவதற்கான காரணங்களையும் மாணவர்கள் கல்வி பெறுகின்ற சந்தர்ப்பம் தடைபடுவதற்கான காரணங்களையும் அடைவுமட்டம் குறைவாக இருப்பதற்கான விளக்கங்களையும் பூரணமாகத் தருவதாக உள்ளன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget