விண்டோஸ் 10 இயக்கத்தில், மூன்று வெவ்வேறு நாடுகளின் காலம் காட்டும் கடிகாரங்களை அமைக்க வசதி தரப்பட்டுள்ளது. அதனை எப்படி
அமைத்து, மூன்றையும் பார்த்து வரலாம் என்று இங்கு பார்க்கலாம்.
வேலை சார்ந்து அல்லது நட்பு உறவு சார்ந்து, நாம் வெவ்வேறு நாடுகளில் உள்ளவர்களுடன் பணிப் பகிர்வினை மேற்கொள்கையில், அவர்கள் வசிக்கும் ஊரில் என்ன கால நேரம் என்று அறிவது அவசியமாகிறது. நாம் இருக்கும் ஊரில் உள்ள நேரப்படி அங்கும் இருக்கும் என்று எதிர்பார்த்து, அவர்களை அழைக்க முயற்சிப்பது, தவறான செயலாகக் கருதப்படும். இதனாலேயே, இந்த வசதியினைப் பயன்படுத்தி வேறு நாடுகளின் நேரம் காட்டும் கடிகாரங்களை அமைத்துக் கொள்வது நல்லது.
விண்டோஸ் 10 இயக்க முறைமையில், இந்த வகையில், மூன்று வெவ்வேறான காலம் காட்டும் கடிகாரங்களை அமைக்கலாம். முதன்மையாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும், மாறா நிலையில், நீங்கள் வசிக்கும் இடத்தின் காலம் காட்டும் கடிகாரம் அமைகிறது. மற்ற இரண்டும் வேறு நாட்டின், நாம் விரும்பும் நாட்டின் நேரம் அறிய அமைப்பினை மேற்கொள்ளலாம். இவை அனைத்தையும், மூன்று கடிகாரங்கள் காட்டும் கால நேரத்தை, சிஸ்டம் ட்ரேயில், கடிகார நேரம் காட்டப்படும் இடத்தில், கர்சரைக் கொண்டு சென்று காணலாம். இங்கு அவற்றை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். மேலும், கூடுதலான எண்ணிக்கையில், மூன்றுக்கும் மேலாக, நேரம் காட்டும் கடிகாரத்தினை அமைக்க எண்ணினால், Alarms & Clock அப்ளிகேஷன் மூலம் எப்படி அமைப்பது என்றும் பார்க்கலாம்.
1. முதலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவைத் திறக்கவும். இதற்கு தேடல் கட்டத்தில் Settings என டைப் செய்து, கிடைக்கும் முதல் விடையில் கிளிக் செய்து செல்லலாம். அல்லது விண்டோஸ் ஐகானில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், செட்டிங்க்ஸ் ஐகான் மீது கிளிக் செய்தும் பெறலாம்.
2. செட்டிங்ஸ் விண்டோ திறக்கப்பட்டவுடன், அங்கு காட்டப்படும் Time & language என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு தரப்பட்டுள்ள Add clocks for different time zones என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
4. அடுத்து, Date & time என்ற பிரிவில், "Additional Clocks" என்னும் டேப் கிளிக் செய்து, அங்கு Show this Clock to enable Clock 1 என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
5. இங்கு கிடைக்கும் மெனு கட்டத்தில், எந்த மண்டல நேரம் (Time Zone) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு ஒரு பெயரையும், நாட்டின் பெயர், அல்லது அங்கு வசிக்கும் உங்கள் நண்பரின் / உறவினரின் பெயர் என எதனை வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.
6. அடுத்து, மீண்டும் மேலே தரப்பட்டுள்ள 4 மற்றும் 5 ல் உள்ள செயல்பாடுகளை அடுத்த இரண்டு கடிகார நேரங்களை அமைக்க மேற்கொள்ளவும்.
7. இறுதியாக, Apply என்பதிலும், ஓகே என்பதிலும் கிளிக் செய்து வெளியேறவும்.
இவற்றை முடித்த பின்னர், சிஸ்டம் ட்ரேயின் வலது ஓரத்தில் உள்ள கடிகாரம் அல்லது நேரத்தின் மீது உங்கள் கர்சரைக் கொண்டு சென்றால், நீங்கள் அமைத்துள்ள மூன்று நாடுகளிலும் அப்போது உள்ள நேரம், நாள் ஆகியன காட்டப்படும். எடுத்துக் காட்டாக, அமெரிக்காவில் வியாழன் இரவு எனில், இந்தியாவில் வெள்ளி காலையாக இருக்கும். எனவே, நேரத்துடன் நாளும் காட்டப்படும்.
மூன்றுக்கும் மேற்பட்ட காலங்களுக்கான கடிகாரம் அமைக்க, அப்ளிகேஷன் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். மூன்று கடிகார நேரம் வரை, மேலே தரப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றி அமைத்துவிடலாம். அதற்கும் மேலாக, இதற்கென விண்டோஸ் 10 தரும், Alarms & Clock அப்ளிகேஷனை இயக்கிப் பயன்படுத்த வேண்டும்.
1. Alarms & Clock அப்ளிகேஷனைத் திறக்கவும்.
2. இங்கு World Clock என்பதில் கிளிக் செய்திடவும்.
3. கீழாக வலது புறத்தில் உள்ள '+' என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
4. மேலாக இடது புறத்தில், ஒரு தேடல் கட்டம் தரப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அங்கு எந்த நாட்டின் நேரம் அமைக்க விரும்புகிறீர்களோ, அதனை டெக்ஸ்ட்டாக உள்ளீடு செய்திடவும்.
இங்கு பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு முறை இணைக்கப்பட்ட புதிய நேரக் கடிகாரத்தைக் காண, இந்த அப்ளிகேஷனை இயக்கிப் பார்க்க வேண்டும். அவ்வாறு இயக்காமல் பார்க்கவும் ஒரு வழி உள்ளது. மேலே கூறப்பட்டது போல, நேரம் அமைக்கையில், அதில் ரைட் கிளிக் செய்தால், 'Pin to Start' என்ற பிரிவு கிடைக்கும். அதில் கிளிக் செய்தால், உங்கள் விரல் நுனியில், நீங்கள் 'பின்' செய்து வைத்த அனைத்து நாட்டு நேரமும் காட்டப்படும்.
கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், திடீரென நீங்கள் செட் செய்யாத ஒரு நாட்டின் நேரம் அறிய வேண்டியதுள்ளது. அதற்கு என்ன செய்திடலாம்? உடனே, மேலே காட்டியபடி, செட் செய்து, அதனை எப்போதும் திரையில் வைத்துக் கொண்டிருக்க வேண்டுமா? தேவை இல்லை.
இணையத்தில் www.timeanddate.com என்று ஓர் இணைய தளம் உள்ளது. அங்கு செல்லவும். அங்கு, நீங்கள் எந்த ஊரில் இருந்து பணியாற்றுகிறீர்களோ அதன் நேரம் Current Time என்று காட்டப்படும். கீழாக World Clock என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் நீங்கள் நேரம் அறிய விரும்பும் ஊரின் பெயரை, டைப் செய்து, அருகில் உள்ள Go என்பதில் கிளிக் செய்தால், திரையில் நீங்கள் தேடும் ஊரின் பெயர், நாடு, அப்போதைய நேரம் என இயங்கிக் கொண்டிருக்கும் கடிகாரத்துடன் காட்டப்படும். மேலும், நீங்கள் குறிப்பிடும் ஊரைக் காட்டும் உலக வரைபடமும் காட்டப்படும்.
என்ன, உலகக் கடிகாரங்கள் அனைத்தும் உங்கள் கரங்களில், கம்ப்யூட்டரின் மானிட்டரில் கட்டப்பட்டுக் கிடைக்கிறதா! பயன்படுத்துங்கள். வெளிநாட்டில் உள்ள உங்கள் நண்பர் அல்லது உறவினரை அழைக்கு முன், அப்போது அங்கு என்ன நேரம், அவர் அலுவலகத்தில் இருப்பாரா, விடுமுறை நாளா என்பதை அறிந்து கொண்டு அழைக்கவும்.

கருத்துரையிடுக